சர்வதேச சந்தை வீழ்ச்சியால் எரிபொருள் விலை சரிவு

1 ஜூலை 2026, 2:25 AM
சர்வதேச சந்தை வீழ்ச்சியால் எரிபொருள் விலை சரிவு

ஷா ஆலாம், ஜூலை 1: கடந்த வார சர்வதேச சந்தையின் சராசரி விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து, மலேசியாவில் மானியமற்ற பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் இந்த வாரத்திற்கு குறைந்துள்ளன.

மானியமற்ற ரோன்97 (RON97) பெட்ரோலின் சில்லறை விலை 10 சென் குறைக்கப்பட்டு ஒரு லிட்டருக்கு 4 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மானியமற்ற ரோன்95 (RON95) பெட்ரோலின் சில்லறை விலையும் 10 சென் குறைக்கப்பட்டு ஒரு லிட்டருக்கு 3 ரிங்கிட் 37 சென் ஆகவும், மானியமற்ற டீசலின் சில்லறை விலை 10 சென் குறைக்கப்பட்டு ஒரு லிட்டருக்கு 3 ரிங்கிட் 97 சென் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைக்கு நாட்டின் எரிபொருள் இருப்பு போதுமானதாக இருந்தாலும், பொதுமக்கள் எரிபொருளைத் தொடர்ந்து சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மடாணி அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

திறமையான பயணத் திட்டமிடல் மற்றும் தேவையற்ற பயணங்களைக் குறைப்பது நாட்டின் எரிபொருள் இருப்பை நீட்டிக்கச் செய்வதுடன், அரசாங்கத்தின் மானியச் செலவின அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.