அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்குக் காவல்துறையினர் வலை வீச்சு

29 ஜூன் 2026, 5:21 AM
அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி, விபத்து ஏற்படுத்திய ஓட்டுநருக்குக் காவல்துறையினர் வலை வீச்சு

கோலாலம்பூர், ஜூன் 29 - கடந்த ஜூன் 20-ஆம் தேதி கூட்டரசு நெடுஞ்சாலையில் (Federal Highway) அபாயகரமான முறையில் வாகனத்தைச் செலுத்தி, விபத்து ஏற்பட காரணமான பெரோடுவா கெம்பாரா (Perodua Kembara) ரக காரின் ஓட்டுநரைப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நேற்று மாலை சமூக ஊடகங்களில் இந்த விபத்து தொடர்பான காரின் உட்புறப் பதிவு கேமரா (Dashcam) காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்துக்குக் காரணமான அந்த ஓட்டுநரின் அடையாளம் மற்றும் அவர் தற்போது இருக்கும் இடம் ஆகியவற்றை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் ஷம்சுடின் மாமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து ஏதேனும் தகவல்கள் அறிந்த அல்லது சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகள், காவல்துறையினரின் விசாரணைக்கு உடனடியாக உதவ முன்வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.