ஷா ஆலாம், ஜூன் 27 - ஜோகூரின் 16-வது மாநிலத் தேர்தலில் மொத்தம் 172 வேட்பாளர்கள் போட்டியிடுவதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியது.
தேசிய முன்னணி, பக்கத்தான் ஹரப்பான் ஆகிய இரு கூட்டணிகள் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
பெரிக்காத்தான் நெஷனல் 33 வேட்பாளர்களையும், பெர்சாமா மலேசியா கட்சி 15 வேட்பாளர்களையும், மூடா கட்சி நான்கு வேட்பாளர்களையும், சோசலிஸ்ட் கட்சியும் ஓராங் அஸ்லி மலேசியா( Orang Asli Malaysia ) கட்சியும் தலா ஒரு வேட்பாளரையும் களமிறக்கியுள்ளது.
இம்மாநிலத் தேர்தலில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களில் 34 பேர் பெண்கள், 138 பேர் ஆண்கள்.
27 தொகுதிகளில் மும்முனை போட்டியும், 12 தொகுதிகளில் நான்கு முனை போட்டியும், 14 தொகுதிகளில் நேரடி போட்டியும் நிலவுகிறது.
மூன்று தொகுதிகளில் வேட்பாளர்கள் 5 முனை போட்டியைச் சந்திக்கின்றனர்.
மூத்த வேட்பாளருக்கு வயது 73. இளைய வேட்பாளருக்கு வயது 23.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் இம்மாநிலத் தேர்தலில் 27 லட்சத்து 27 ஆயிரத்து 926 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.







