வெனிசுவாலா-வைப் புரட்டிப் போட்ட 2 நிலநடுக்கங்கள்:உயிரிழந்தோர் 900-ஆக உயர்வு

27 ஜூன் 2026, 3:59 AM
வெனிசுவாலா-வைப் புரட்டிப் போட்ட 2  நிலநடுக்கங்கள்:உயிரிழந்தோர் 900-ஆக உயர்வு

கரகாஸ், ஜூன் 27 - வெனிசுவாலாவை அடுத்தடுத்து உலுக்கிய இரு நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900-க்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. காயமடைந்தோர் எண்ணிக்கை 3,360-ஆக உயர்ந்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான அனைத்துலக மீட்பு பணியாளர்கள் வெனிசுவாலா வந்தடைந்திருக்கும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இன்னும் பலர் காணாமல் போயிருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என ஐயுறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை, சில நொடி இடைவேளையில் வெனிசுவாலாவை இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் புரட்டிப் போட்டன. அதில் இரண்டாவதாக பதிவாகிய 7.5 magnitude அளவிலான நிலநடுக்கம் கடந்த நூற்றாண்டில் அந்நாட்டை உலுக்கிய மிக வலுவான நிலநடுக்கமாக கருதப்படுகிறது.

அந்த இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, 214 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு நடப்பு அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ( Delcy Rodríguez) தெரிவித்தார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.