நாக் அவுட் சுற்றில் ஜப்பான் பிரேசிலுடன் மோதுகிறது

26 ஜூன் 2026, 5:29 AM
நாக் அவுட் சுற்றில் ஜப்பான் பிரேசிலுடன் மோதுகிறது

ஆர்லிங்டென், ஜூன் 26 - உலகக் கிண்ணத்தின் இறுதி 32 அணிகள் மோதும் நாக் அவுட் (Knockout) சுற்றில் ஜப்பான் பிரேசிலைச் சந்திக்கிறது.

முன்னதாக அவ்வணி சுவீடனுடன் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டதைத் தொடர்ந்து எஃப் குழுவில் நெதர்லாந்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

டெக்சஸ்-சில் 70,000 ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய ஜப்பான் பிற்பாதியில் டைசன் மேடா (Daizen Maeda) மூலமாக முதல் கோலைப் பெற்று முன்னனி வகித்தது.

எனினும், சில நிமிடங்களிலே அந்தோனி எலங்கா (Anthony Elanga) சுவீடனுக்கான முதல் கோலை அடித்து ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார்.

இவ்வேளையில் எஃப் குழுவில் நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்த சுவீடனும் நாக் வுட் சுற்றுக்கு முன்னேறியது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.