ad

மலேசியா சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடு; எந்த வல்லாதிக்கத்துக்கும் அடி பணியாது: அன்வார்

8 நவம்பர் 2025, 9:37 AM
மலேசியா சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடு; எந்த வல்லாதிக்கத்துக்கும் அடி பணியாது: அன்வார்
மலேசியா சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடு; எந்த வல்லாதிக்கத்துக்கும் அடி பணியாது: அன்வார்

புக்கிட் மெர்தாஜாம், நவம்பர் 8 — சர்வதேச உறவுகளை அமைப்பதில் மலேசியா எந்த பெரிய வல்லாதிக்க த்திற்கும் அடிப் பணியாது, சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட நாடாகத் தொடரும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இந்த நிலைப்பாடு அமெரிக்கா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் வர்த்தக, முதலீடு உறவுகளை மலேசியா தொடர அனுமதிக்கிறது. இது நாட்டின் பொருளாதார நன்மைக்கும் மக்களின் நலனுக்கும் உதவுவதாகும்.

“எங்களுக்கும் அமேரிக்காவுடனும் நல்ல உறவு உள்ளது. உதாரணமாக, கடந்த ஞாயிறு (கோலாலம்பூரில் நடைபெற்ற 47 வது ஆசியான் உச்சி மாநாட்டில்) அமேரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் (ART) கையெழுத் திட்டோம், ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கலந்துரையாடினோம்.

உடனே, நாம் அமேரிக்காவுக்கு பணிந்து விட்டோம் என சிலர் விமர்சித்தனர்.“நானும் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவையும் அழைத்தேன். அவர் ஜி 20க்கு  தலைமை வகிக்கிறார். டிரம்ப், அமெரிக்க பிரதிநிதிகள் யாரும் ஜி 20-க்கு செல்லக்கூடாது என்று தடை அறிவித்தாலும், மலேசியா சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடு என்பதால் நான் அங்கு சென்று கலந்து கொள்கிறேன்.

அமெரிக்காவின் உத்தரவுக்கு பணிந்திருந்தால், நான் செல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.
அவர் இன்று இங்கு செபராங் ஜெயா எக்ஸ்போ வளாகத்தில் நடைபெற்ற ஜூரு–சுங்கை துவா சுங்கச்சாவடி இடையிலான போக்குவரத்து சீரமைப்பு திட்டத்தின் முதல் அடிகோள் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பினாங்கு  முதல்வர் சௌ கோன் யாவும், பணிகள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, நிதி அமைச்சர் II டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஸிசான், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் அரசு தலைமை செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சராகவும் உள்ள அன்வார், அமெரிக்காவுடன் ART ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டாலும், அது மலேசியாவை பிற நாடுகளு-டனான ஒத்துழைப்பில் கட்டுப் படுத்தாது என்றார். குறிப்பாக அரிய தனிமங்கள் (rare earths) துறையில் பல்வேறு நாடுகள் ஈடு பட்டுள்ளன என்றும் விளக்கினார்.

“சிலர் அரிய தனிமங்கள் முதலீடு அமெரிக்காவுடன் மட்டுமே என்று சொல்கிறார்கள் — அது முற்றிலும் தவறு. பஹாங்கில் லைனாஸ் நிறுவனத்தில் ஆஸ்திரேலிய முதலீடு உள்ளது. மேலும் RM600 மில்லியன் புதிய முதலீடு JS Link மூலம் வந்துள்ளது. “பேராக்கில், இந்தத் துறையில் சீன முதலீடு உள்ளது. எந்தத் தடைமும் இல்லை. எனவே ஒப்பந்தத்தைப் பார்ப்பதற்கு நாம் அதில் உள்ள விலக்குகள் மற்றும் வாய்ப்புகளையும் பார்க்க வேண்டும்,” என்றார்.

இந்த நடைமுறை அணுகுமுறையால் குறைக்கடத்தி சிப்புகள் (semiconductors), பசுமை ஆற்றல் உள்ளிட்ட உயர்தர முதலீடுகளை மலேசியா தொடர்ந்து ஈர்க்க முடியும், இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவும் அமெரிக்காவும் ART ஒப்பந்தத்தில் அக்டோபர் 26 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 47 வது ஆசியான் உச்சி மாநாட்டின் போது கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம், 2025 ஏப்ரல் 2 அன்று டிரம்ப் வெளியிட்ட நிர்வாக ஆணை 14257 கீழ், மலேசியா மீது விதிக்கப்பட்ட 25% சுங்க வரியை 19% ஆக குறைக்கும் முன்மொழிவாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.