லண்டன், டிச 4- இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் மலேசிய நேரப்படி இன்று அதிகாலையில் நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் அர்சனல் அணி, பெரன்ஃபோட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் அர்சனல் அணி பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திலும் ஐந்து புள்ளிகள் இடைவெளியில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
அர்சனல் அணிக்கான வெற்றிக்கோல்களை மிக்கெல் மெரினோ, புகாயொ சாகா ஆகியோர் புகுத்தி அர்சனல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணி ப்ரைட்டனை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


