ஸ்பெயினில் கடுமையான வெப்ப அலை: நான்கு நாட்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

26 ஜூன் 2026, 3:04 AM
ஸ்பெயினில் கடுமையான வெப்ப அலை: நான்கு நாட்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மாட்ரிட், ஜூன் 26: ஸ்பெயின் நாட்டில் கோடைக்காலத்தின் முதல் வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான இடைப்பட்ட காலத்தில் வழக்கத்திற்கு மாறாக 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை அங்கு பதிவாகியுள்ளது.

இந்த அதீத வெப்பத்தின் காரணமாக, நாடு முழுவதும் 212 பேர் மரணமடைந்துள்ளதாக மாட்ரிட்டில் உள்ள கார்லோஸ் III பல்கலைக்கழகத்தின் (Carlos III University) மரண கண்காணிப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது.

இதில், கடந்த புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 95 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் ஒவ்வொரு ஆண்டும் நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டு மே 16 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் மட்டும் நாடு முழுவதும் வெப்பம் தொடர்பான பாதிப்புகளால் 3,832 பேர் உயிரிழந்துள்ளனர்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.