ஷா ஆலாம், ஜூன் 21 - அடுத்தாண்டுக்கான முதலாமாண்டு மாணவர்களின் நுழைவைச் சமாளிக்க சிலாங்கூரிலுள்ள 34 பள்ளிக் கூடங்களில் புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்படவுள்ளன.
ஒரு கோடியே 79 லட்சம் ரிங்கிட் செலவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அத்திட்டத்தின் கீழ் பெரும்பாதி வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாக சிலாங்கூர் பொதுப்பணித் துறை இயக்குநர் ஷுக்ரி இஷாக் தெரிவித்தார்.
தற்போதைக்கு ஒரு மாடி கொண்ட கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மக்கட் தொகை அதிகமுள்ள தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் இந்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது.







