வகுப்பறை நெரிசலுக்குத் தீர்வு: சிலாங்கூரில் 111 பள்ளிகளுக்கு 78 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

13 ஜனவரி 2026, 3:49 AM
வகுப்பறை நெரிசலுக்குத் தீர்வு: சிலாங்கூரில் 111 பள்ளிகளுக்கு 78 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

கோல லங்காட், ஜனவரி 13: சிலாங்கூர் மாநிலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளின் நெரிசல் பிரச்சினையைக் குறைக்க, கடந்த ஆண்டு சுமார் 78 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் மொத்தம் 111 பள்ளிகள் திட்டங்களைப் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு, அதே திட்டத்தின் கீழ் மேலும் 48 பள்ளிகள் இத்தகைய வசதிகளைப் பெறுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திர் புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். கல்வி அமைச்சால் (KPM) செயல்படுத்தப்படும் இத்திட்டம், மாணவர் நெரிசலைக் குறைக்க தற்காலிக அல்லது நிரந்தர கூடுதல் வகுப்பறைகளைக் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

"இது அமைச்சின் ஒரு சிறந்த செயல்பாட்டு முறையாகும். "இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது, வகுப்பறை நெரிசல் சிக்கலைத் தீர்க்க கல்வி அமைச்சு தொடர்ந்து முயற்சிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் காட்டிய தீவிர அக்கறைக்காகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக்கிற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட 'தொழில்துறை கட்டுமான அமைப்பு' (IBS) அடிப்படையிலான பள்ளி கட்டுமானத் திட்டம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறை நெரிசலைத் தீர்ப்பதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமையும் என்று ஃபட்லினா தெரிவித்திருந்தார்.

பொதுப்பணித் துறையுடன் (JKR) இணைந்து கல்வி அமைச்சு மேற்கொண்ட இந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பாலான கட்டிடப் பணிகள் சில மாதங்களிலேயே முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.