புது டில்லி,ஜூன் 21 - இந்தியாவில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் மறுதேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
வினாத்தாள் கசிவை அடுத்து மீண்டும் நடத்தப்படும் அதிக போட்டித்தன்மமை கொண்ட அந்த மறுதேர்வை நடத்த போலீசார் உட்பட 2 லட்சத்துக்கும் அதிகமான அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.டெலிகிராம் செயலியின் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் அடையாளம், செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு காமிராக்கள், வினாத்தாள்களின் விநியோகத்தை GPS-தடங்காட்டி மூலமாக கண்காணித்தல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேசிய தேர்வு வாரியம் எடுத்துள்ளது.
இந்திய மருத்துவ கல்லூரிகளுக்குத் தேர்வு பெற , கிட்டத்தட்ட ஒரு லட்சம் இடங்களுக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
இவ்வேளையில், இதற்கு முந்தைய நீட் வினாத்தாள் கசிவுக்கு முக்கிய காரணமாக இருந்ததன் தொடர்பில் வேதியியல் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.







