பட்டவொர்த், ஜுன் 20 - ஊடகப் பணியாளர்கள், தேசிய இருதய கழகத்தில் ( IJN) இருதய மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு 15 விழுக்காடு சிறப்பு கட்டண கழிவு வழங்கப்படும்.
நேரம் பாராமல் வேலை செய்யும் ஊடகப் பணியாளர்கள் தங்களின் இருதய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
அதையடுத்து, தேசிய ஊடக தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஊடக பணியாளர்களின் அர்ப்பணைப்பை பாராட்டும் வகையில் ஐ.ஜே.ன் அந்த சிறப்பு சலுகையை வழங்கியிருப்பதாக அக்கழகத்தின் விளம்பர துறையின் தலைவர் ஃபாரா டெலா சுஹாய்மி (Farah Delah Suhaimi) தெரிவித்தார்.
ECG -எலக்ட்ரோ கார்டியோகிராம், இருதய ஆற்றலை சோதிக்கும் பரிசோதனை மற்றும் இருதய நிபுணர்களுடன் சிறப்பு மருத்துவ ஆலோசனை ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட பரிசோதனைகளுக்கு இந்த கழிவு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
வரும் மூன்று மாத கால கட்டத்தில் ஹவானா ( HAWANA ) அல்லது ஐஜஎன்( IJN ) அகப்பக்கத்தின் வாயிலாகப் பதிந்து கொள்ளும் ஊடகப் பணியாளர்கள் இவ்வாண்டு இறுதி வரையில் பரிசோதனைக்கான தேதியை முடிவு செய்துக் கொள்ளலாம் என்றாரவர்.







