RM50,000 வரையில் இருதய சிகிச்சை உதவி : 2,000-திற்கும் மேற்பட்டோர் பயன்

29 செப்டெம்பர் 2026, 1:39 PM
RM50,000 வரையில்  இருதய சிகிச்சை உதவி : 2,000-திற்கும் மேற்பட்டோர் பயன்
RM50,000 வரையில்  இருதய சிகிச்சை உதவி : 2,000-திற்கும் மேற்பட்டோர் பயன்

ஷா ஆலாம், செப் 29 - சிலாங்கூர் இருதய சிகிச்சை உதவித் திட்டத்தின் கீழ், 2018-ஆம் ஆண்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையில், 2,305 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

உயர்வான நிதிச் சுமை இன்றி தரமான சிகிச்சையைப் பெற அத்திட்டம் உதவி வருவதாக, மாநில சுகாதார ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

சிலாங்கூர் இருதய சிகிச்சை உதவித் திட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இருதய சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவுகளை ஈடுகட்ட 50,000 ரிங்கிட் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

"தேசிய இருதய நிறுவனம் (IJN), கார்டியாக் வாஸ்குலர் சென்ட்ரல் கோலாலம்பூர் (CVSKL), சன்வே மருத்துவமனை (Hospital Sunway) மற்றும் யுஐடிஎம் புஞ்சாக் ஆலாம் மருத்துவமனை (Hospital UiTM Puncak Alam) ஆகியவை அதில் அடங்கும்.

இந்த உதவி நோயாளிகளுக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சைப் பெற வாய்ப்பளிக்கிறது, இதன் மூலம் தீவிர சிக்கல்கள், நிரந்தர ஊனம் மற்றும் இருதய நோயால் ஏற்படும் மரண அபாயங்கள் குறைக்கப்படுகின்றன," என ஜமாலியா ஜமாலுடின் இன்று வெளியிட்டட அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், குறிப்பாக குறைந்த - நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கான தீவிர இருதய நோய் சிகிச்சையில் கவனம் செலுத்தும் ஒரு பொது சுகாதார முயற்சியென ஜமாலியா கூறினார்.

"இத்திட்டம் மாத வருமானம் 8,000 ரிங்கிட்டுக்கும் கீழ் உள்ள குடும்பங்களை இலக்காகக் கொண்டுள்ளது.

பொருளாதாரப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைவரும் சமமான முறையில் தரமான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்," என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இன்று கொண்டாடப்படும் உலக இருதய தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் இருதய ஆரோக்கியத்தைப் புறக்கணிக்க வேண்டாம் என்றும், குறிப்பாக ஆபத்துக் குழுவில் உள்ளவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்கள் சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என்றும் ஜமாலியா நினைவூட்டினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.