கோலாலம்பூர், ஜூன் 5: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், குறிப்பாக உலகம் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வேகமாகப் பின் தொடரும் இக் காலகட்டத்தில், அறிவாற்றல் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பது மடாணி (MADANI) தேசத்தை உருவாக்கும் முயற்சிகளில் முக்கிய அடிப்படையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை தொழில்நுட்ப சாதனைகள் மற்றும் பௌதீக வளர்ச்சியின் அடிப்படையில் மட்டும் அளவிட முடியாது, மாறாக அது நம்பிக்கையின் வலிமை மற்றும் மனித விழுமியங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"செயற்கை நுண்ணறிவு உட்பட புதிய வளர்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் துரத்துவதை நாம் காண்கிறோம், ஆனால் அதன் அடிப்படை அறிவாகவும் நற்பண்புகளாகவும் இருக்க வேண்டும்," என்று அவர் இன்று இரவு இங்குள்ள மெனாரா மெர்டேகா 118-இல் உள்ள அல்-சுல்தான் அப்துல்லா பள்ளிவாசலில் நடைபெற்ற மஜ்லிஸ் இல்மு மடாணி (Majlis Ilmu MADANI) நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார்.
தொழில்நுட்பத்தின் தேர்ச்சி மற்றும் புதிய முன்னேற்றங்களை, நம்பிக்கை, நற்பண்பு மற்றும் மனித விழுமியங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது என்று அன்வார் கூறினார்.
அறிவு மற்றும் நாகரிகத்தின் பலத்தால் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் உலகை வழி நடத்தினார்கள், ஆனால் அந்த அறிவுசார் மரபைக் கைவிட்ட போது பின்தங்கி விட்டனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய இஸ்லாமிய அறிஞர்களால் உருவாக்கப்பட்ட அறிவு மற்றும் சிந்தனையின் பலத்தினால், உலக வளர்ச்சியை வடிவமைப்பதிலும், பல்வேறு பிராந்தியங்களில் செல்வாக்கு செலுத்துவதிலும் இஸ்லாம் இதற்கு முன்பு வெற்றி பெற்றது என்று பிரதமர் கூறினார்.
முன்னதாக, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையால் (ஜாகிம் - JAKIM) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மஜ்லிஸ் இல்மு மடாணி நிகழ்வில், அறிவுப் பகிர்வு மற்றும் மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேட்பதற்காகச் சமூகத்தின் பல்வேறு தரப்பினர் ஒன்று கூடினர்.
ஷேக் முஹம்மது ஹைதரா அல்-ஜிலானி மற்றும் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன் அல் ஹமீத் உட்பட வருகை தந்திருந்த இஸ்லாமிய அறிஞர்களுக்கு அன்வார் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி ஹசானும் கலந்து கொண்டார்.
அறிவு, நற்பண்புகளே மடாணி தேச வளர்ச்சியின் அடிப்படை
5 ஜூன் 2026, 4:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்துவதன் வழி, நாட்டு வளம் மக்களுக்கே திருப்பியளிக்கப்படும் - பிரதமர்
Pakiya
31 மே 2026

national
இன்று காமாத்தான் திருவிழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார் பிரதமர்
Pakiya
30 மே 2026

national
எதிர்கால அரசியல் சவால்களை எதிர் கொள்ள ஆயத்த நிலையை மேம்படுத்துவதற்கு- கெஅடிலன் சிலாங்கூர் மாநாடு
Pakiya
8 பிப்ரவரி 2026

national
இனங்களுக்கு இடையிலான பதற்றத்தை தூண்டும் நடவடிக்கையும் “கடுமையாக கட்டுப் படுத்தப்படும்
Pakiya
7 பிப்ரவரி 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



