கோலாலம்பூர், பிப்ர 7 ;- “மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தாலும், இனவாத மற்றும் இன பதற்றத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுவோர் மீது ‘அதிகபட்ச நடவடிக்கை’ எடுக்கப்படும் என பிரதமர் கூறினார்.

பேரணியில் பங்கேற்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் எச்சரித்தார். “சட்டவிரோத” வழிபாட்டு தலங்களுக்கு எதிராக இன்று இரவு நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க நினைப்பவர்களுக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர்கள் சட்டத்தை மதித்து, பொது பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.மலேசியர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், அரசை விமர்சிக்கவும் சுதந்திரம் பெற்றவர்கள் என்றாலும், சட்டத்தை மீறும் அல்லது இனங்களுக்கு இடையிலான பதற்றத்தை தூண்டும் எந்தவொரு நடவடிக்கையும் “கடுமையாக கட்டுப்படுத்தப்படும். என அன்வார் கூறினார்.
“அவர்களை கைது செய்து வெளியேற்றுங்கள்,” என்று இன்று நடைபெற்ற பிகேஆர் கட்சியின் சிலாங்கூர் மாநில மாநாட்டில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார். மலாய், சீனர் மற்றும் இந்தியர்களுக்கிடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையில் (அருவையான) விஷயங்களை பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், எந்த காரணத்திற்காகவும் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், பேரணியில் பங்கேற்பவர்கள் தங்களது எல்லையை மீறி சட்ட அமலாக்க அதிகாரிகளாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்தார்.“நீங்கள் நீதிபதிகள் அல்ல, நீங்கள் போலீஸாரும் அல்ல. அவர்களின் வேலையை கைப்பற்ற முயற்சிக்காதீர்கள்,” என்று அவர் கூறினார்.
சட்டவிரோதமாக கட்டப்படும் கோவில்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அன்வார் மீண்டும் வலியுறுத்தினார். மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் போலவே, அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
சட்டத்தை மீறும் பேரணி பங்கேற்பாளர்களை கைது செய்து வெளியேற்ற வேண்டும் என்ற அவர்.மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தாலும், இனவாத பதற்றத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடுவோர் மீது ‘அதிகபட்ச நடவடிக்கை’ எடுக்கப்படும் என பிரதமர் கூறினார்.
வழிபாட்டுத் தலங்களும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். மசூதிகள் கட்ட உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள், இந்தியர்கள் அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் கோவில் கட்டுவது அவர்களின் உரிமை அதற்கான நிலம் , அனுமதி வழங்கப்பட்டு இருந்தால் அதை அனைவரும் மதிக்க வேண்டும், அதை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு உரிமை, தேவை ஆசை என பல உண்டு.
ஒரு தேசிய இனமாக நாம் அதற்கு துணை நிற்க வேண்டும். அதை விடுத்து நாம் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினார். இதற்கு முன்னதாக, கோலாலம்பூர் போலீஸ், பொது பாதுகாப்பு காரணங்களால் சோகோ வணிக வளாகம் அருகே நடைபெற இருந்த இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப் படாது என்று தெரிவித்தனர்.
ஆனால், ஏற்பாட்டாளர்கள் பேரணி நடைபெறும் என வலியுறுத்தினர்.பிரசங்கி சம்ரி வினோத் தலைமையிலான அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி, “சட்டவிரோத” வழிபாட்டு தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக, கோலாலம்பூர் போலீஸ், பொது பாதுகாப்பு காரணங்களால் சோகோ வணிக வளாகம் அருகே நடைபெற இருந்த இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்தனர். ஆனால், ஏற்பாட்டாளர்கள் பேரணி நடைபெறும் என வலியுறுத்தினர்.
பிரசங்கி சம்ரி வினோத் தலைமையிலான அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி, “சட்டவிரோத” வழிபாட்டு தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட உள்ளது



