இன்று காமாத்தான் திருவிழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார் பிரதமர்

30 மே 2026, 5:15 AM
இன்று காமாத்தான் திருவிழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார் பிரதமர்

கோத்தா கினபாலு, மே 30 – சபா மாநில அளவிலான 2026ஆம் ஆண்டுக்கான காமாத்தான் திருவிழாவை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பெனாம்பாங்கில் உள்ள கடசான்டூசுன் கலாச்சார சங்கத்தின் (KDCA) ஹொங்கொட் கொய்சானில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.

காலை 11 மணியளவில் கலாச்சார மண்டபத்திற்கு வருகை புரியும் அவர், இந்த வருடாந்திர கலாச்சார விழாவைத் தொடக்கி வைப்பதோடு, பாரம்பரிய நெல் அறுவடை நிகழ்விலும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.

முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர் துணையுடன், கொய்சான் கலாச்சார கிராமத்தில் (Koisaan Cultural Village) அமைந்துள்ள பாரம்பரிய இல்லங்களைப் பிரதமர் பார்வையிடுவார். மேலும், அங்கு வருகை தந்திருக்கும் பார்வையாளர்களுடனும் அவர் கலந்துரையாடுவார்.

இதனிடையே, இந்தத் திருவிழாவின் அதிகாரப்பூர்வ நிறைவு விழாவை சபா யாங் டிபெர்துவா நெகிரி துன் மூசா அமான் நாளை முன்னின்று நடத்துவார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்
படுகிறது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், மக்களின் பயணத்தை எளிதாக்கவும், இமாகோ மற்றும் சூரியா வணிக வளாகங்களிலிருந்து ஹொங்கொட் கொய்சானுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இலவசப் பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

காமாத்தான் திருவிழா என்பது, அமோகமான நெல் அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சபா மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடைத் திருவிழாவாகும். இது மே மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், அதன் உச்சக்கட்டக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.