பெட்ரோல், டீசல் விலைகள் சரிவு; நிதி அமைச்சு அறிவிப்பு

4 ஜூன் 2026, 1:47 AM
பெட்ரோல், டீசல் விலைகள் சரிவு; நிதி அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 4 – இன்று முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான வாராந்திர விலைப் பட்டியலில், மானியமில்லாத ரோன்97 , ரோன்95 பெட்ரோல் மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் கணிசமான சரிவைக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரோன்97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 30 சென் குறைந்து, 4 ரிங்கிட் 35 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மானியமில்லாத ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 20 சென் குறைந்து, 3 ரிங்கிட் 72 சென்னாக உள்ளது.

மேலும், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையும் லிட்டருக்கு 20 சென் குறைக்கப்பட்டு, 4 ரிங்கிட் 67 சென்னாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய சந்தையில் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, தானியங்கி விலை நிர்ணய முறைமையின் (APM) கீழ் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை வீழ்ச்சிக்கு மத்தியிலும், குறிப்பிட்ட இலக்கு குழுக்களுக்கான மானிய விலையை மடாணி (MADANI) அரசாங்கம் தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளது. இதன் கீழ், மானிய அடிப்படையிலான ரோன்95 (BUDI95) பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னாகவும் மற்றும் சபா, சரவாக், லாபுவான் ஆகிய பகுதிகளுக்கான டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென்னாக நீடிக்கிறது.

தற்போதைய இந்த விலை வீழ்ச்சியானது உலகளாவிய எண்ணெய் சந்தை முழுமையாக ஸ்திரமடைந்துவிட்டதைக் குறிக்காது என்று எச்சரித்துள்ள நிதி அமைச்சு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இன்னும் ஆபத்து நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, ஆசியாவின் முக்கிய இறக்குமதி நாடுகள் மாற்று வழிகளில் கச்சா எண்ணெயைப் பெற முயன்று வருவதால், சந்தையில் தொடர்ந்து இறுக்கமான சூழலே நிலவுகிறது.

எனவே, இந்த மோதல்கள் நீடித்தால் எதிர்காலத்தில் மீண்டும் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதால், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் எரிபொருளைப் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மடாணி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.