முதியோர் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது, திட்டங்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்

2 ஜூன் 2026, 5:07 AM
முதியோர் நடமாட்டம் குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாகவே உள்ளது, திட்டங்களை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்

ஷா ஆலம், ஜூன் 2: அன்றாட வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்தாலும், நடமாடும் திறன் (mobility) குறித்த விழிப்புணர்வு, குறிப்பாக முதியோர்களிடையே இன்னும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது அதிகரிக்கும் போது சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான உடல் இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய மக்களின் புரிதலை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்த 'முதியோர்களுக்கான நடமாட்டப் பட்டறை' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் (ADN) ஆர். ராஜீவ் தெரிவித்தார்.

அன்றாட வாழ்வில் சுறுசுறுப்பாக செயல்படச் சிரமப்படும் முதியவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீது இத்திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

"நடமாடும் திறன் என்பது மனிதர்களின் வாழ்க்கைத் தரத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது, இதுபோன்ற அமர்வுகளின் மூலம் பலரும் சிறந்த பலன்களை அடையலாம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

அன்றாட உடல் அசைவுகளை மேம்படுத்துவதற்கும், சுறுசுறுப்பான மற்றும் சுதந்திரமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கும் பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு குறிப்புகள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். (கடந்த மே 24-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா வில் இப்பட்டறை வெற்றிகரமாக நடைபெற்றது).

இதற்கிடையில், நடமாடும் திறன் என்பதைச் சமூகம் பெரும்பாலும் ஒரு சாதாரண விஷயமாகவே கருதுகிறது என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக அதிகாரி சோமேஸ்வரன் சிவனாதன் தெரிவித்தார்.

"பலர் நடமாட்டம் என்பது வெறுமனே ஓர் இடத்திலிருந்து நகர்வது என்று மட்டுமே நினைக்கிறார்கள், ஆனால் சுறுசுறுப்பாக இருக்க ஒரு நபர் எவ்வாறு சரியான முறையில் உடலை இயக்குகிறார் என்பதையும் இது உள்ளடக்கியதாகும்," என்று அவர் கூறினார்.

அமேசிங் சீனியர்ஸ் (Amazing Seniors) மற்றும் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இணைந்து முன்னெடுத்த இத்திட்டத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இதுபோன்ற பயனுள்ள திட்டங்களை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது நடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.