புஞ்சாக் ஆலம் சுகாதாரக் கிளினிக் கட்ட நிலம் கையகப்படுத்த சுகாதார அமைச்சு விண்ணப்பம்

31 மே 2026, 1:11 AM
புஞ்சாக் ஆலம் சுகாதாரக் கிளினிக் கட்ட நிலம் கையகப்படுத்த சுகாதார அமைச்சு விண்ணப்பம்

ஷா ஆலம், மே 30: புஞ்சாக் ஆலம் சுகாதாரக் கிளினிக் (Klinik Kesihatan) நிர்மாணிப்பதற்கு, சிலாங்கூர் நிலம் மற்றும் கனிமவளத் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திடம் (JKPTG) நிலம் கையகப்படுத்துவதற்கான விண்ணப்ப-த்தை மலேசிய சுகாதார அமைச்சு (KKM) சமர்ப்பித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் பிரிவு 4-இன் கீழ் இந்த விண்ணப்பம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி சமர்ப்பிக்கப் பட்டதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருப்ப- தாகவும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர்   ஜூல்கிப்ளி அகமது  தெரிவித்தார்.

சினார் ஹரியான் செய்தியின்படி, அடையாளம் காணப்பட்ட இந்த நிலம் புஞ்சாக் ஆலம், ஆலம் சூரியாவில் அமைந்துள்ளது. இது தற்போது கடைகள் அமைந்துள்ள 11 நிலப்பகுதிகளை (lot) உள்ளடக்கியது என அவர் விளக்கினார்.

"நாங்கள் அங்கு நிலத்தை கையகப் படுத்தவுள்ளோம். இதற்கான நடைமுறைகள் முடிவடைந்தவுடன், அப்பகுதியின் உரிமை சுகாதார அமைச்சின் வசமாகும்," என்று இன்று பண்டார் புஞ்சாக் ஆலாம், மூன்றாம் கட்டத்தில் உள்ள சமூக மண்டபத்தில் நடைபெற்ற கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற அளவிலான மாபெரும் குர்பான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் கூறினார்.

புஞ்சாக் ஆலமில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த மூன்றாம் நிலை (tahap tiga) சுகாதாரக் கிளினிக் கட்டப்படும் என்று  டத்தோ ஶ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி  தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் ஆரம்பக் கட்டப் பணிகளுக்-காக 5 மில்லியன் ரிங்கிட் மானியத்தை அரசாங்கம் அனுமதித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு 50 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

"ஆரம்பக் கட்டப் பணிகளுக்காக 5 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஏற்கனவே அங்கீகரித்து ள்ளது, அதே வேளையில் முழு திட்டத்திற்கான செலவு சுமார் 50 மில்லியன் ரிங்கிட் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

ஒப்புதல் பெறுவது மற்றும் நிலம் கையகப் படுத்தும் பணிகள் தடையின்றி சீராக நடந்தால், இதன் கட்டுமானப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இத்திட்டம் தொடர்பான பணிகளைத் துரிதப் படுத்துவதற்காக, சிலாங்கூர் மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் சுகாதார அமைச்சு சிறப்புச் சந்திப்பு ஒன்றையும் நடத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

https://www.mediaselangor.com/ms/2026/05/376966

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.