சைபர் ஜெயா, மே 27: சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சிமாநாட்டின் (SIBS) மூலம் சிறு, நடுத்தர நிறுவனங்களை (SMEs) வட்டாரச் சந்தைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை வழி, ஒரே சந்தையைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் முயற்சியைச் சிலாங்கூர் தீவிரப் படுத்தியுள்ளது.

-பெருகிவரும் சவாலான மற்றும் நிலையற்ற உலகப் பொருளாதார சூழ்நிலையில் மாநிலத்-தின் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்து-வதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று சிலாங்கூர் முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
"இதன் காரணமாக, இந்த ஆண்டுக்கான SIBS, இரு நாடுகளைச் சேர்ந்த அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பில் கவனம் செலுத்தும் ஒரு மன்ற வடிவத்திலான நிகழ்ச்சியை நடத்த இந்தோனே- சியாவின் பண்டுங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.
"தற்போதைய நிலையற்ற உலகப் பொருளாதார சூழ்நிலையில், ஒவ்வொரு செலவையும் நாம் கவனமாகச் செய்ய வேண்டியுள்ளதால், இது ஒரு பெரிய அளவிலான மாநாடு அல்ல," என்று அவர் சமீபத்தில் மீடியா சிலாங்கூருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறினார். எதிர்கால வர்த்தக நகர்வு மலேசியாவின் உள்ளூர் சந்தையில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது, மாறாக சுமார் 600 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தென்கிழக்கு ஆசியச் சந்தையின் திறனைப் பார்க்க வேண்டும் என்று அவர் விளக்கினார்.
மாநில முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான இன்வெஸ்ட் சிலாங்கூர் (Invest Selangor), எதிர்காலத்தில் ஆசியான் (ASEAN) சந்தையில் அதிக கவனம் செலுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.இது சிலாங்கூருக்குத் தரமான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியில் மட்டுமல்லாமல், தற்போதுள்ள நிறுவனங்கள் வட்டார அளவில் விரிவடையவும் உதவும்.
நிறுவனங்களுக்கு இடையே உத்திபூர்வமான ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் திறக்கும் வகையில் வட்டமேசை விவாதங்கள், வர்த்தக மன்றங்கள் மற்றும் கள வருகைகள் ஆகியவற்றுக்கு இந் நிகழ்ச்சி முக்கியத்துவம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
SIBS-க்கு புதிய அணுகுமுறை தேவை பண்டுங் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த இங் ஸீ ஹான், அறிமுகப் படுத்தப்பட்டதிலிருந்து சிறப்பாக வளர்ச்சியடைந்து, SIBS இப்போது ஒரு முதிர்ந்த நிலையை எட்டியுள்ளது என்றார்.
மலேசியாவுடன் பல பொருளாதார ஒற்றுமைக- ளைக் கொண்டிருப்பதாலும், இந்தோனேசிய விமானப் போக்குவரத்துத் துறை மேம்பாட்டு மையங்களில் ஒன்றாகப் பண்டுங் திகழ்வதால் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
"வர்த்தக உலகில், எல்லா நேரங்களிலும் அனைத்து தரப்பினரும் போட்டியிட வேண்டும் என்பதில்லை. ஒத்துழைப்பின் மூலம், நாம் உண்மையில் ஒரு பெரிய மற்றும் வலுவான சந்தையை ஒன்றாக உருவாக்க முடியும். "ஆரம்பத்திலிருந்தே சந்தையை ஆக்கிரமிக்க மட்டுமே நினைத்தால், அந்த ஒத்துழைப்பு நீண்ட காலம் நிலைக்காது. வர்த்தக உலகில் இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் சூழல் எப்போதும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
உலகளாவிய நிலையற்ற தன்மை சிலாங்கூர் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது
மத்திய கிழக்கு மோதல்கள் குறித்து கருத்துரைத்த அவர், விநியோகச் சங்கிலி நிலையற்ற தன்மையை எதிர்கொண்ட ஐரோப்பிய நிறுவனங்களின் அனுபவம், அவர்களை ஒரே ஒரு சந்தையை அல்லது விநியோக ஆதாரத்தை மட்டுமே சார்ந்திருப்பதில் மிகவும் கவனமாக இருக்கச் செய்துள்ளது என்றார்.
"ஐரோப்பாவின் உள்நாட்டுச் சந்தை சற்று வரம்புக்குட்பட்டது, எனவே அவர்களின் பல நிறுவனங்கள் விநியோகச் சங்கிலி தடை படாமல் இருப்பதை உறுதி செய்ய தங்கள் செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு விரிவு படுத்தத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு கவர்ச்சிகரமான இடமாகச் சிலாங்கூர் மாறியுள்ளது," என்று அவர் கூறினார்.
உயர்தர நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை எளிதாக்கவும் சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு ஐரோப்பாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற் கொள்ளத் திட்டமிட்டுள்ளதையும் அவர் வெளிப்படுத்தினார். பதிவுக்காக, கடந்த ஆண்டு SIBS 8.17 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சாத்தியமான பரிவர்த்தனைகளைப் பதிவு செய்தது.
இது தென்கிழக்கு ஆசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மற்றும் முதலீட்டு மையமாகச் சிலாங்கூரின் நிலையை வலுப்படுத்தியது. இன்வெஸ்ட் சிலாங்கூர் வழியாகச் சிலாங்கூர் அரசாங்கம் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் 740 கண்காட்சி சாவடிகள் இடம்பெற்றன. மேலும் 89 நாடுகளைச் சேர்ந்த 56,938 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
5,810-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் 179 கருத்தரங்குகள் மற்றும் மன்ற அமர்வுகளும் ஏற்பாடு செய்யப் பட்டன.SIBS ஆறு முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியது, அதாவது சிலாங்கூர் முதலீடு மற்றும் தொழில் பூங்கா எக்ஸ்போ (SPARK), சிலாங்கூர் ஆசியான் வர்த்தக மாநாடு (SBAC), சிலாங்கூர் அனைத்துலக உணவு மற்றும் பான எக்ஸ்போ (SIE F&B), சிலாங்கூர் சீர்மிகு நகரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார மாநாடு (SDEC), சிலாங்கூர் வான்வெளி உச்சிமாநாடு (SAS) மற்றும் சிலாங்கூர் அனைத்துலகப் பராமரிப்பு உச்சிமாநாடு (SICS).
original news : https://www.mediaselangor.com/ms/2026/05/373679Photo link if have :








