கிள்ளான், மே 24: இங்குள்ள லாமான் செனி சஃபாரியில் (Laman Seni Safari) நடைபெற்ற 22-வது மலேசிய விளையாட்டுப் போட்டி (சுக்மா) மற்றும் பாரா சுக்மா 2026 (PARA SUKMA 2026) ஆகியவற்றுக்கான தீப ஓட்டப் பயணத்தில் 1,300-க்கும் மேற்பட்ட கிள்ளான் மக்கள் பங்கேற்றனர்.
கிள்ளான் கார் இல்லாத தினத்தை (Hari Klang Tanpa Kenderaan) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரண்டாம் கட்ட தீப ஓட்டப் பயணத்தில், பல்வேறு தரப்பு மக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
3.2 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த ஓட்டத்திற்கு அதிகாலை முதலே பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பு கிடைத்ததாகக் கிள்ளான் துணை மேயர் முகமட் சாரி அஃபெண்டி மோட் ஆரிஃப் தெரிவித்தார்.
"நாங்கள் எதிர்பார்த்தபடியே, வானிலையும் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்த காலை நேர நிகழ்வைச் சிறப்பிப்பதற்காகக் கிள்ளான் மக்கள் அதிகாலையிலேயே திரளாக வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
"கிள்ளானில், கார் இல்லாத தினத்துடன் இணைந்து இதனை நடத்தியதால் இது சற்று சிறப்பானதாக அமைந்தது. இதன் காரணமாகவே ஓட்டத்தில் பங்கேற்க அதிகமானோர் வந்திருந்தனர், இதுவே எங்களுக்குக் கிடைத்த கூடுதல் பலமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (MBSA) துணை மேயர் சஃப்ரியா முகம்மட் அஸ்ஹார் தலைமையிலான ஓட்டக் குழுவினரிடமிருந்து தீபத்தை முகமட் சாரி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் சிலாங்கூர் சுக்மா குழுவின் தலைவர் அப்பாஸ் சலிமி அஸ்மி மற்றும் சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் (MSN) நிர்வாக இயக்குநர் முகமட் நிஸாம் மர்ஜுகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, விளையாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் 22-வது சுக்மா மற்றும் பாரா சுக்மா 2026 தீப ஓட்டப் பயணம் கடந்த மே 10-ஆம் தேதி ஷா ஆலம் சுதந்திரச் சதுக்கத்தில் (Dataran Kemerdekaan Shah Alam) தொடங்கியது.
ஷா ஆலம் மற்றும் கிள்ளானைத் தொடர்ந்து, இந்தப் பயணம் ஜூன் 6-ஆம் தேதி கோலா சிலாங்கூருக்கும், அதன்பின்னர் சபாக் பெர்ணம், உலு சிலாங்கூர், செலாயாங், அம்பாங் ஜெயா, காஜாங், சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலா லங்காட் ஆகிய பகுதிகளுக்கும் சென்று, இறுதியாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிப்பாங்கில் நிறைவடையும்.
22-வது சிலாங்கூர் சுக்மா 2026 விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் 24 வரையிலும், பாரா சுக்மா போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 14 வரையிலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
கிள்ளானில் நடைபெற்ற சுக்மா தீப ஓட்டப் பயணத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
24 மே 2026, 5:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Zen Hong, Eliza named best athletes of Selangor SUKMA 2026
Kathiravan Manoharan
25 ஆகஸ்ட் 2026

video
State declares Sept 1 holiday after winning SUKMA
Kathiravan Manoharan
25 ஆகஸ்ட் 2026

video
SUKMA 2026: Selangor Cricket Team Wins Gold in T20 Category
Kathiravan Manoharan
24 ஆகஸ்ட் 2026

video
SUKMA 2026 Silambam: Preteish Wins Gold, Kiranjenifeer Bags Bronze for Selangor
Kathiravan Manoharan
22 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?




