ஷா ஆலம், மே 22: சபாக் பெர்ணம், ஜாலான் கம்போங் தெங்காவில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேன் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஆறாம் படிவ மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை 6 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா ஆறாம் படிவக் கல்லூரியில் பயிலும் 19 வயதுடைய அம்மாணவி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த விபத்தில் ஹோண்டா ஆர்.எஸ் 150 (Honda RS150), யமஹா 135 எல்.சி (Yamaha 135LC) ஆகிய இரு மோட்டார் சைக்கிள்களும், போர்ட் எகனோவேன் (Ford Econovan) ரக வேன் ஒன்றும் சம்பந்தப்பட்டுள்ளதாக சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் முகமட் யூசோப் அகமட் தெரிவித்தார்.
"சாலையின் இடது புறம் உள்ள சந்திப்பில் திரும்புவதற்காக வேகத்தைக் குறைத்த யமஹா 135 எல்.சி மோட்டார்சைக்கிளின் பின்புறத்தில், மாணவி ஓட்டி வந்த ஹோண்டா ஆர்.எஸ்150 மோட்டார்சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
"இந்த மோதலின் தாக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த மாணவியின் மோட்டார்சைக்கிள், எதிர் திசைப் பாதைக்குச் சென்று அங்கு வந்து கொண்டிருந்த போர்ட் எகனோவேன் மீது பலமாக மோதியது," என்று பி.எச் (BH) செய்தியிடம் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் கீழே விழுந்த அந்த மாணவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
"இச்சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குச் செல்லுமாறும் அல்லது விசாரணைக்கு உதவ இன்ஸ்பெக்டர் முகம்மட் ஷைபுடின் முகமட் நோர் என்பவரை 017-6645812 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் முகமட் யூசோப் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதல்: ஆறாம் படிவ மாணவி பலி
22 மே 2026, 4:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சபாக் பெர்னாமில் RM65 லட்சம் செலவில் 15 வெள்ள நிவாரணத் திட்டங்கள்
Media Selangor Team
5 செப்டெம்பர் 2026

national
சுகாதாரமற்ற முறையில் இயங்கிய இரண்டு உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடல்; சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் அதிரடி நடவடிக்கை
Shalini Rajamogun
29 ஜூலை 2026

selangor
மத்திய கிழக்கு நெருக்கடியால் மாநில அரசின் சிக்கன நடவடிக்கைகளில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலம் புறக்கணிக்கப்பட மாட்டாது.
Pakiya, Siti Rohaizah Zainal
5 ஏப்ரல் 2026

selangor
டிரெய்லருடன் கார் உரசிய விபத்தில் ஆடவர் பலி: தகவல் தெரிந்தவர்களை சாட்சிக்கு உதவ போலீஸ் அழைக்கிறது
Pakiya
2 ஏப்ரல் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



