சபாக் பெர்ணம், ஏப்ரல் 5: மத்திய கிழக்கு மோதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உலகளாவிய நிச்சயமற்ற நிலையின் தாக்கத்தைச் சமாளிக்க மாநில அரசு அறிவிக்கவிருக்கும் இலக்கு நோக்கிய நடவடிக்கைகளில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்.
மாநிலப் பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்திகளாக விளங்கும் இவ்விரு தரப்பினருக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“மாநில அரசாங்கம் தற்போதைய நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து, கடுமையாக உழைத்து வருகிறது. நாம் நிச்சயமாக அழுத்தங்களை எதிர் கொள்கிறோம், ஆனால் சிலாங்கூர் இந்த சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டமிடத் தொடங்கியுள்ளது.”
“நான் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து, சபாக் பெர்ணாமில் உள்ள விவசாயிகள், மீனவர்கள் மற்றும் முக்கியப் பொருளாதார இயக்கிகளுக்கான சில ஆதரவுத் திட்டங்களைத் தீட்டத் தொடங்கியுள்ளேன்.”
“நெருக்கடிக்கு மத்தியிலும் தற்போதுள்ள துறைகளில் வேலைவாய்ப்புகளைத் தக்கவைப்பதுடன், தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக உணவு விஷயத்தில் உதவுவதே எங்கள் முக்கியக் கவனமாக இருக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று சுங்கை ஆய்ர் தவாரில் உள்ள டேவான் ஸ்ரீ நக்கோடாவில் நடைபெற்ற ‘மஜ்லிஸ் தௌத்தான் காசே டீ’ டேசா’ நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அமிருடின் இவ்வாறு கூறினார். நீண்ட காலத் தீர்வாக, மாநில அரசாங்கம் பசுமை எரிசக்தித் தொழிலில் கவனம் செலுத்தும் என்றும் அவர் விளக்கினார்.
எதிர்காலத்தில் எரிசக்தி விநியோகத்தைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்வு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.
அதே வேளையில், நெருக்கடிக்கு மத்தியிலும் சிலாங்கூரில் உணவுப் பொருள் விநியோகம் போதுமானதாக இருப்பதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமிருடின் அறிவுறுத்தினார்.
“உணவு மற்றும் அரிசி விநியோகத்தை நான் கண்காணித்து வருகிறேன். தற்போதைக்கு, சிலாங்கூரில் உணவுப் பொருட்கள் போதுமான அளவில் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட உணவுக் கிடங்கு, மூன்று மாத காலத்திற்குத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய திறன் கொண்டது.”
“கூட்டாட்சி அரசாங்கமும் அரிசி, இறைச்சி போன்ற பொருட்களின் விநியோகம் போதுமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. எனவே, பீதி வேண்டாம். நாங்கள் ஒவ்வொரு நாளும் விநியோகம் மற்றும் விலைகளைக் கண்காணிப்போம்,” என்றார்.
இதற்கிடையில், மற்றவர்களைக் குறை கூறுவதைத் தவிர்த்து, சவால்களை எதிர் கொள்ள மக்கள் தொடர்ந்து ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் இருக்க வேண்டும் என்று அமிருடின் நினைவூட்டினார்.
“இது பிரிவினைக்கான நேரம் அல்ல; ஒற்றுமையுடன் இருந்து நமது வாழ்வாதா-ரத்தைப் பாதுகாக்க வேண்டிய நேரம். செயல்படுத்தப்படவிருக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கியதாக இருக்கும். மாநில அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு உதவும்,” என்று அவர் மேலும் கூறினார்.
original news : https://mediaselangor.com/ms/2026/04/350690
மத்திய கிழக்கு நெருக்கடியால் மாநில அரசின் சிக்கன நடவடிக்கைகளில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலம் புறக்கணிக்கப்பட மாட்டாது.
5 ஏப்ரல் 2026, 2:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சபாக் பெர்னாமில் RM65 லட்சம் செலவில் 15 வெள்ள நிவாரணத் திட்டங்கள்
Media Selangor Team
5 செப்டெம்பர் 2026

national
சுகாதாரமற்ற முறையில் இயங்கிய இரண்டு உணவகங்கள் 14 நாட்களுக்கு மூடல்; சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் அதிரடி நடவடிக்கை
Shalini Rajamogun
29 ஜூலை 2026

selangor
வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதல்: ஆறாம் படிவ மாணவி பலி
Pakiya
22 மே 2026

selangor
டிரெய்லருடன் கார் உரசிய விபத்தில் ஆடவர் பலி: தகவல் தெரிந்தவர்களை சாட்சிக்கு உதவ போலீஸ் அழைக்கிறது
Pakiya
2 ஏப்ரல் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



