சண்டாகானில் தீ விபத்து: 84 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்

19 மே 2026, 3:44 AM
சண்டாகானில் தீ விபத்து: 84 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்

சண்டாக்கான், மே 19: ஜாலான் ஃபூக் ஹின், பத்து 12 பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 84 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நிகோலா என அடையாளம் காணப்பட்ட அந்த மூதாட்டியின் சடலம், நேற்றிரவு 10.44 மணியளவில் வீட்டின் வரவேற்பறையில் இருந்து தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்டதாக சண்டாக்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜிம்மி லாகுங் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த மூதாட்டி வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது.

நேற்றிரவு 8.38 மணியளவில் இந்தத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகவும், அதனைத் தொடர்ந்து 13 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் ஜிம்மி லாகுங் குறிப்பிட்டார்.

தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடிய வேளையில், இரவு 9.35 மணியளவில் தீ மேலும் பரவாமல் முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

மீட்டெடுக்கப்பட்ட மூதாட்டியின் சடலம் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்கோர விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.