உலு சிலாங்கூரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: இருவர் கைது

13 மே 2026, 8:23 AM
உலு சிலாங்கூரில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: இருவர் கைது

ஷா ஆலம், மே 13 - உலு சிலாங்கூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு அதிரடிச் சோதனைகளில், போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு ஆடவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் கைது நடவடிக்கை இரவு 11 மணியளவில் புக்கிட் செந்தோசா (Bukit Sentosa) பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு பிடிபட்ட நபரைச் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 'ஷாபு' (Syabu) எனச் சந்தேகிக்கப்படும் படிக வடிவிலான போதைப்பொருள் அடங்கிய 11 சிறிய நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டப் பிரிவு 39A(1)-இன் கீழ் புலனாய்வு அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாலை 6 மணியளவில் பத்தாங் காலி (Batang Kali) காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் மேற்கொண்ட மற்றொரு சோதனையில், உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்த 'நெவோக்ஸ்' (Nevoks) ரக மின்சுருட்டு (Electronic Cigarette) கார்ட்ரிட்ஜை ஆய்வு செய்தபோது, அதில் 'கெட்டமின்' (Ketamine) வகை போதைப்பொருள் கலந்த திரவம் இருப்பது கண்டறியப்பட்டது. இக்குற்றம் குறித்து அதே சட்டப் பிரிவு 12(3)-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இத்தகைய சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், உடனடியாகக் காவல்துறையினருக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.