சிலாங்கூர் முழுவதும் பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரித்த தொழில்முறை மெக்கானிக்கின் புது வாழ்வாதாரம்

13 மே 2026, 4:59 AM
சிலாங்கூர் முழுவதும் பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரித்த தொழில்முறை மெக்கானிக்கின் புது வாழ்வாதாரம்

ஷா ஆலம், மே 13: பயன்படுத்தப்பட்ட சமையல் (எண்ணெயை) வீடு-வீடாக சென்று  சேகரிப்பதில் தொடங்கிய, ஒரு முன்னாள் மெக்கானிக் இப்போது சமையலறை(எண்ணெயை) கழிவுகளை சிலாங்கூர் முழுவதும் சேகரித்து  வளரும்  வாழ்வாதாரமாக மாற்றியுள்ளார்.

31 வயதான முகமது அஜீசுல் ஹனாஃபி கயாட்,  சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட்-19 தொற்றுநோய் காலத்தின் போது தனது வேலையை இழந்த பின்னர் கடந்த  ஐந்து ஆண்டுகளாக வாழ்வாதாரமாக சிறிய அளவில்  வணிகத்தைத் தொடங்கினார்.

"தான் 10 ஆண்டுகள் அனுபவமிக்க  மெக்கானிக்காக  பணியாற்றி  வந்ததாகவும், பின்  தொற்று நோய்  காலத்தில் தனது வேலையையும் வருமானத்தையும் இழந்ததால், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை எங்கு அப்புறப்படுத்துவது என்று பல உள்ளூர்வாசிகளுக்கு தெரியாத போது இதை வணிகமயமாகும் யோசனை எனக்கு கிடைத்தது, ஏனெனில், அந்த நேரத்தில், பயண்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்வது பற்றி பலருக்கு தெரியாது "என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

அஜீசுலின் முயற்சிகள் சிறிய அளவில் தொடங்கி, பின்னர் பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்  விரிவடைந்தது, அந்நிறுவனங்கள் அவரை, பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரிப்பதற்கான முகவராக நியமித்தது.

அப்போதிருந்து, ஜோஹோரின் தாங்காக்கைச் சேர்ந்த தொழில் முனைவோர், சமூகப் பகுதிகளிலும் வர்த்தகர்களிடம் இருந்தும் வழக்கமான எண்ணை வசூலை மேற்கொண்டுள்ளார்.

"எங்களின் பெரும்பகுதி எண்ணை அன்றாடம்  உணவகங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது, வார இறுதி நாட்களில் சமூகப் பகுதிகளில் கவனம் செலுத்தப்படுகிறது" என்று அவர் கூறினார்,

  பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்வதன் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது, ஏனெனில் இது மாசுபாட்டை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல் கூடுதல் வருமானத்தையும் உருவாக்க முடியும்.

பயோடீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற தொழில்துறை பயன்பாடுகளுக்கான நிறுவனங்களால் பதப்படுத்தப் படுவதற்கு முன்பு எண்ணெய் சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறது.

"கடந்த காலத்தில், மக்கள் அதை வெறுமனே எறிந்து விடுவார்கள் அல்லது  கால்வாய் அல்லது கழிவு நீர் குழாய்களில் கழுவி விடுவார்கள், ஆனால் இப்போது பலர் அதை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர், ஏனெனில் அது மறு விற்பனை செய்ய முடியும், மேலும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்க்கு மதிப்பு இருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள்" என்று அஜீசுல் கூறினார்.

பங்கியை தளமாகக் கொண்ட சேகரிப்பு நடவடிக்கை, சேகரிக்கும் பகுதியைப் பொறுத்து, ஒரு நாளைக்கு 500 கிலோ முதல் இரண்டு டன் வரை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிக்க முடியும்.

சமையல் எண்ணெய் சேகரிப்பு சுற்றுச்சூழலுக்கு உதவுகிறது.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை முறையற்ற முறையில் அகற்றுவது குழாய்கள் மற்றும் வடிகால்களை அடைத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

சோப்பு, தண்ணீர் அல்லது என்ஜின் எண்ணெய் போன்ற  அன்னிய  பொருட்களின் கலப்படத்தால்  மாசுபட்ட எண்ணெயை உருவாகிறது. அப்படிப் பட்டவைகள்  மறுவிற்பனை செய்ய முடியாது, ஏனெனில், இது, அதன் தரத்தை பாதிக்கிறது.

"அசுத்தமான அல்லது தரமற்ற  எண்ணெயை அதன் வாசனை மற்றும் தன்மை மற்றும் வர்ணத்தின் மூலம் நாம் அடையாளம் காணலாம். முன்பு சரியாக சுத்தம் செய்யப்படாத சோப்பு கொள்கலன்களில் எண்ணெய் ஊற்ற படும் போது இது வழக்கமாக நிகழ்கிறது "என்று அஜீசுல் கூறினார்.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அவர் அறிவார், ஆனால் இந்த பிரச்சினை பொது விழிப்புணர்வு மற்றும் சமூக நிர்வாகத்தைப் பொறுத்தது என்று நம்புகிறார்.

ஆயினும்கூட, சுற்றுச்சூழல் நிலைத் தன்மையைப் பாதுகாக்க இதுபோன்ற சமையலறை கழிவுகளை முறையாக நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் கவனத்தில் கொள்வார்கள் என்று அஜீசுல் நம்புகிறார்.

"இப்போது, இது இனி ஒரு வணிகம் மட்டுமல்ல, ஒரு சமூக சுற்றுச்சூழல் அமைப்பாக மாறிவிட்டது. சுற்றுச்சூழலுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்புகளையும் இது வழங்குகிறது "என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.