சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விளம்பரங்களை நீக்க 'மெட்டா' நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் உத்தரவு!

6 ஜூலை 2026, 4:37 AM
சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விளம்பரங்களை நீக்க 'மெட்டா' நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் உத்தரவு!

ஹைதராபாட், ஜூலை 6 - இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் உள்ள விளம்பரங்கள் மூலம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் உள்ளடக்கங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அத்தகைய அனைத்துப் பதிவுகளையும் உடனடியாக நீக்குமாறு மெட்டா (Meta) நிறுவனத்திற்கு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் அல்லது அதற்கான அணுகலை எளிதாக்கும் அனைத்து விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் உடனடியாக முடக்குமாறு இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்குப் பணித்துள்ளது.

மெட்டா நிறுவனத்தின் உயர்தர அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்துமாறு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து விரிவான விளக்க அறிக்கையை ஏழு நாட்களுக்குள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.