பொந்தியான், மே 4 – பெக்கான் நானாஸ், கம்போங் மலாயு ராயாவில் புயல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர், நேற்று மாலை 6 மணிக்கு திறக்கப்பட்ட தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட பலத்த காற்றினால் 29 கட்டிடங்களின் கூரைகள் மற்றும் உட்கூரைகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, எஸ்.கே. மலாயு ராயா தேசியப் பள்ளியில் இந்த நிவாரண மையம் திறக்கப்பட்டதாக பொந்தியான் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்தது.
"இந்த சம்பவத்தில் 23 வாடகை வீடுகள், ஐந்து சொந்த வீடுகள் மற்றும் ஒரு மதரஸா குடியிருப்பு ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை," என்று அந்த செயலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனத்துடன் ஆரம்பக்கட்ட உதவி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு மலேசிய பாதுகாப்புப் படையின் இரண்டு அவசர ஊர்திகள் மற்றும் அரச மலேசிய காவல்துறையின் ஒரு ரோந்து வாகனமும் ஆதரவளித்தன.
பெக்கான் நானாஸில் புயல் - 100 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம்
4 மே 2026, 3:23 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தைப்பிங்கில் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்தது
Shalini Rajamogun
25 பிப்ரவரி 2026

selangor
கம்போங் புக்கிட் காப்பாரில் புயல்; 32 வீடுகள் சேதம்
Media Selangor Team
2 செப்டெம்பர் 2026

national
பிலிப்பைன்ஸில் புயல், பருவமழையால் 50.8 லட்சம் பேர் பாதிப்பு
Bernama
17 ஆகஸ்ட் 2026

selangor
கோல லங்காட்டில் புயலால் சேதமடைந்த 11 வீடுகளைச் சீரமைக்க மாநில அரசு உதவிகளை விரைவுபடுத்தும்
Shalini Rajamogun
6 பிப்ரவரி 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



