டெங்கிலில் புயலால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது

23 ஜனவரி 2026, 8:58 AM
டெங்கிலில் புயலால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஜன 23: டெங்கில், கம்போங் செமாராங் மற்றும் கம்போங் லாலாங்கில் புயலால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களை நேரில் காண அங்கு ஒரு களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

 இதில் டெங்கில் மாநில சட்டமன்ற (DUN) ஒருங்கிணைப்பாளர் நூராஸ்லி சையட், சிலாங்கூர் பிரதமர் துறை (JPM) அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு (ICU) இயக்குநர், டத்தோ முகமட் கிடிர் மஜிட் மற்றும் பல தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 புயலால் பாதிக்கப்பட்டவர்களின் மீது உடனடி கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதோடு, சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கிய சேதத்தின் விளைவுகளை நேரில் பார்ப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நூராஸ்லி முகநூல் பதிவில் தெரிவித்தார்.

 இந்த பயணத்தின் போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக, குறிப்பாக புயலால் சேதமடைந்த வீடுகளின் ஆரம்ப பழுதுபார்ப்புத் தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

 பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் அக்கறை மற்றும் ஒத்துழைப்பு அளித்த சிலாங்கூர் JPM ICU மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

 "இந்த உதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையை ஓரளவு குறைக்கும் என்று நம்புகிறோம்," என அவர் கூறினார்.

 வீடுகளை மீட்டெடுக்கும் செயல்முறையை விரைவுபடுத்தவும், புயலால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் தொடர்ந்து பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் இந்த உதவி உதவும் என்று நம்புவதாக நூராஸ்லி மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.