ஷா ஆலம், மே 3: நேற்று இங்குள்ள பண்டார் சுல்தான் சுலைமான் பகுதிக்குச் செல்லும் சாலையில் செம்பனை எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரியின் தொட்டி கழன்று விழுந்ததில், அதில் இருந்த எண்ணெய் சாலையில் சிதறியது.
கிள்ளான், ரந்தாவ் பாஞ்சாங்கிலிருந்து வந்த லாரி, நேற்று மதியம் சுமார் 1.55 மணியளவில் பாலத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது, லாரியின் முன்பகுதியிலிருந்து தொட்டியின் பூட்டுக் கழன்றதால், நெடுஞ்சாலையின் இடதுபுற ஓரத்தில் தொட்டி விழுந்ததாக வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் எஸ். விஜய ராவ் கூறினார்.
"49 வயதான உள்ளூர் லாரி ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வரலாம் அல்லது போக்குவரத்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஆர். கிஷன் ராஜை 011-2624 9291 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என விஜய ராவ் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்குச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, பிரிவு 43(1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
முன்னதாக, கிள்ளானில் ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் லாரியின் தொட்டி திடீரெனக் கழன்று கவிழ்ந்து, எண்ணெய் சாலையில் சிதறிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
லாரியிலிருந்து கழன்ற விழுந்த எண்ணெய்த் தொட்டி - எண்ணெய் சிதறியது
3 மே 2026, 4:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநருக்கு ஒருநாள் சிறைத் தண்டனை, RM13,000 அபராதம்
Pakiya
22 ஏப்ரல் 2026

selangor
போதையில் அல்லது போதைப்பொருள் மயகத்தில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை, பிரம்படியுடன் கடும் தண்டனை தேவை
Pakiya
30 மார்ச் 2026

national
‘டெஸ்ட் டிரைவ்’ செய்வதாகக் கூறி 30,000 ரிங்கிட் மதிப்புள்ள காரை திருடிய சந்தேக நபருக்கு காவல்துறையினர் வலைவீச்சு
Shalini Rajamogun
13 ஜூலை 2026

selangor
LRT3-க்கான நடைபாதைகளின் கட்டுமானம் விரைவுப்படுத்தப்படும்; ஷா ஆலாம் மாநகராட்சி
Shalini Rajamogun
1 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



