ஷா ஆலம், மார்ச் 30: குடிபோதையில் அல்லது போதைப்பொருள் மயகத்தில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தும் நபர்களுக்கு பிரம்படி மற்றும் அதிகபட்ச சிறைத் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பப்பா ராய்டு வலியுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகள் எந்தவித சமரசமுமின்றி தகுந்த தண்டனையைப் பெறுவதை உறுதிசெய்ய, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றும், அவை திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"சட்டங்கள் சமரசமின்றி செயல்படுத்தப்பட வேண்டும். தேவைப்பட்டால், குற்றவாளிகளுக்கு பிரம்படி மற்றும் அதிகபட்ச சிறைத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை வழங்க சட்டங்களைத் திருத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.
கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் இரு சிறு பிள்ளைகளின் தந்தையான மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியான கோர விபத்தைத் தொடர்ந்து இந்த வலியுறுத்தல் வந்துள்ளது.
இத்தகைய துயரச் சம்பவங்கள் தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல, மாறாக மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன என்றும், இது தற்போது சாலைப் பாதுகாப்பில் ஒரு தீவிரமான பிரச்சனையாக மாறியுள்ளது என்றும் பப்பாராய்டு கூறினார்.
"சிலரின் பொறுப்பற்ற செயல்களால், பொறுமிக்க பல ஆத்மாக்களின் உயிர் சூரையாடப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்," என்றார் அவர்.
இதேபோன்ற துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, கடுமையான நடவடிக்கை மற்றும் அமலாக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தக்க உடனடியாக உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
#
original news : https://mediaselangor.com/ms/2026/03/349809
போதையில் அல்லது போதைப்பொருள் மயகத்தில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு சிறைத் தண்டனை, பிரம்படியுடன் கடும் தண்டனை தேவை
30 மார்ச் 2026, 6:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
லாரியிலிருந்து கழன்ற விழுந்த எண்ணெய்த் தொட்டி - எண்ணெய் சிதறியது
Pakiya
3 மே 2026

national
போதையில் வாகனம் ஓட்டி சிவப்பு விளக்கை மீறிய குற்றத்திற்காக, பெண் ஓட்டுநருக்கு ஒருநாள் சிறைத் தண்டனை, RM13,000 அபராதம்
Pakiya
22 ஏப்ரல் 2026

selangor
கிள்ளானில் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தை: வேலை தேடுவோருக்கு அழைப்பு
Media Selangor Team
4 செப்டெம்பர் 2026

selangor
சிலம்ப விளையாட்டின் வளர்ச்சி ; நிதி ஒதுக்கீட்டுக்கான முயற்சிகள் எடுக்கப்படும் - பாப்பாராய்டு
Evelyn Moses
28 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



