கோலாலம்பூர், மே 2: நாட்டின் மனித மூலதன மேம்பாடு மற்றும் தொழிலாளர் சந்தையின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புள்ள 'புரோகிரசிவ் அக்சலரேஷன் ஃபார் கெப்பபிலிட்டி அண்ட் எம்ப்ளாய்மென்ட்' (PACE) எனும் பொருளாதார பின்னடைவுத் தொகுப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று புக்கிட் ஜாலில், யூனிஃபை அரங்கில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், PACE திட்டம் பொருளாதார பின்னடைவு உத்தியின் ஒரு பகுதியாகும் என்றார்.
"இது நான்கு முக்கிய முன்முயற்சிகளை உள்ளடக்கியது மற்றும் மனிதவள அமைச்சு (KESUMA) மூலம் செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.
மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களுக்கு, குறிப்பாக மலேசியா-சிங்கப்பூர் எல்லை தாண்டும் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்காக, சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017-இல் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
இந்த முன்முயற்சி, ஜோகூர் பாலம் வழியாக வேலைக்குச் செல்லும் 480,000-க்கும் அதிகமான தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"சராசரியாக, ஒவ்வொரு வாரமும் நமது குடிமக்களில் ஒருவர் அல்லது எல்லை தாண்டும் தொழிலாளர்களிடையே 54 மரணங்கள் நிகழ்கின்றன. நமது பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்ய அதிகாலை 4 மணிக்கு எழுந்து சிங்கப்பூருக்குச் சென்று இரவு திரும்புகின்றனர். எனவே, வெளிநாட்டில் உள்ள மலேசிய குடிமக்களுக்கு பெர்கெசோ பாதுகாப்பை எவ்வாறு விரிவுபடுத்துவது?"
"அதற்காக, பாதுகாப்பை விரிவுபடுத்தும் வகையில் சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017-ஐ நாம் திருத்துவோம்," என்றார் அவர்.
இதற்கிடையில், மனிதவள அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் நான்கு முக்கிய முன்முயற்சிகளை உள்ளடக்கிய PACE திட்டம் குறித்து விளக்கிய அன்வார், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டத்தின் (SIP) பலன்கள் மூலம் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த பெர்கெசோ 580 மில்லியன் ரிங்கிட் நிதியை வழங்குவதாகக் கூறினார்.
"செயற்கை நுண்ணறிவு யுகத்தில், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதில் நாம் பின்தங்கிவிடக் கூடாது. இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் போட்டித்தன்மையுடனும் உற்பத்தித்திறனுடனும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக, HRD கார்ப் மூலம் அரசாங்கம் HRD யாகின் மடாணி திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது. இது வேலைவாய்ப்புகளை எளிதாக்குவதற்காக மைஃபியூச்சர்ஜாப்ஸ் (MyFutureJobs) ஆதரவையும் பெற்றுள்ளது."
"மூன்றாவதாக, தற்காலிகப் பணியாளர்களின் (gig workers) திறன்களைப் பன்முகப்படுத்தவும், சமூகப் பாதுகாப்பு பாதுகாப்பை வலுப்படுத்தவும், குறிப்பாக இ-ஹெய்லிங் மற்றும் பி-ஹெய்லிங் தொழிலாளர்களின் திறன் பயிற்சிக்காக, திறன் கல்வி நிதி நிறுவனத்திற்கு (PTPK) அரசாங்கம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது," என்று அவர் கூறியபோது கூட்டத்தில் பலத்த கரவொலி எழுந்தது.
கூடுதலாக, தொழில்துறை பயிற்சியாளர்களை பணியமர்த்தும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PMKS) மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க, தொழில்துறை பயிற்சி மானியத்திற்கு (Geran Padanan Latihan Industri) டேலண்ட்கார்ப் (TalentCorp) மூலம் 10 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுவதாகவும் அன்வார் அறிவித்தார்.
நாட்டின் மனித மூலதன மேம்பாட்டுக்கு 710 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பொருளாதார பின்னடைவு தொகுப்பை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் அறிவித்தார்
2 மே 2026, 6:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
Lindung 24 Jam பங்களிப்பிலிருந்து விலக்கு பெற தொழிலாளர்கள் படிவத்தை நிரப்ப வேண்டும்
Latchumy Ramamoorthy
10 ஜூலை 2026

national
ஜூன் வரையில் 42,800 தொழிலாளர்கள் வேலை இழந்தனர் - மனிதவள அமைச்சு தகவல்
Latchumy Ramamoorthy
10 ஜூலை 2026

national
Lindung 24 Jam உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாயமில்லை ; வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாயம்
Latchumy Ramamoorthy
9 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



