ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தலைமையிலான போரில் ஈடுபட விரும்பவில்லை என்ற தனது தொடர்ச்சியான நிலைப்பாட்டை பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த நெருக்கடியின் தொடக்கத்திலிருந்தே பிரான்ஸ் இந்தப் போரில் பங்கேற்கவில்லை. இதன் நோக்கங்கள் தெளிவாக வரையறுக்கப் படாததாலும், சர்வதேச சட்டத்தின் கட்டமைப்புக்கு வெளியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாலும், பிரான்ஸ் இதில் பங்கேற்பது சாத்தியமில்லை என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம்," என்று பரோட் பி.எஃப்.எம் தொலைக்காட்சிக்கு (BFM TV) தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் கட்டமைப்பிற்குள், விரோதப் போக்குகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
"நாங்கள் ஆதரிக்காத, நாங்கள் பங்கேற்காத இந்தப் போர் தொடங்கியதிலிருந்து அனைவரும் பார்த்தது போல், பதட்டங்களின் அபாயம் மிக அதிகமாக உள்ளது. இது உலகப் பொருளாதாரத்திலும், அதன் விளைவாக நமது அன்றாட வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று பரோட் கூறினார்.
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அந்தப் பாதையில் போக்குவரத்தை மீட்டெடுக்க தேவையான நிலைமைகளை உருவாக்க ஒரு சர்வதேசப் பணியைத் தாங்கள் தயாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
"எந்தவொரு ஜலசந்தியிலும் தடைகளோ, அச்சுறுத்தல்கள் அல்லது சுங்கக் கட்டணங்கள் இருக்கக்கூடாது. சர்வதேச நீர் நிலைகள் எந்த வகையிலும் அல்லது யாராலும் தடுக்க படக்கூடாது," என்று பரோட் கூறினார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. இது வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிராக தெஹ்ரானின் பதிலடிக்கு வழிவகுத்தது. மேலும், உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20 விழுக்காட்டைக் கொண்டுள்ள முக்கிய நீர்வழிப் பாதையைத் தடுத்தது.
போர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, அதை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
-- பெர்னாமா
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தலைமையிலான போரில் ஈடுபட விரும்பவில்லை என்ற பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் வலியுறுத்தியுள்ளார்
2 மே 2026, 3:38 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
2030 குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை இயக்குநர் பதவி விலகல்
Pakiya
26 பிப்ரவரி 2026

national
நேபாளத்தில் காணாமல் போன 54 மலேசியர்களுக்கு விரைவில் இறப்புச் சான்றிதழ்: சட்டத் திருத்த முயற்சி
Bernama
18 அக்டோபர் 2026

national
பிரான்ஸில் போராட்டங்கள்: அவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்தல்
Media Selangor Team
18 அக்டோபர் 2026

antarabangsa
பிரான்ஸ், ஸ்பெயினில் மிரட்டும் காட்டுத்தீ; 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்
Reuters
25 ஜூலை 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



