பாரிஸ், நவ 27- பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன் அடுத்த வாரம் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் முதலில் பெய்ஜிங் மற்றும் பின்னர் தென்மேற்கு நகரமான செங்டுக்கும் (Chengdu) செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 மே மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங் பிரான்சுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, மக்ரோன் கடைசியாக ஏப்ரல் 2023-இல் அங்கு சென்ற பிறகு, இந்த முறை சீன அதிபர் ஜி ஜின்பிங்கை (Xi Jinping) சந்திக்கவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையே "தொடர்ச்சியான மற்றும் ஆழமான உரையாடலைப் பேண வேண்டும் என்ற விருப்பத்திற்கு ஏற்ப" இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று எலிசே அரண்மனை கூறியுள்ளது. "
அடுத்த ஆண்டு பிரான்ஸ் ஜி7 (G7) அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், மக்ரோன் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களை இந்தக் கூட்டத்தில் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


