பாரிஸ், பிப். 25 (பெர்னாமா-டிபிஏ) -- 2030 குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை இயக்குநர் சிரில் லினெட், உள்நாட்டுக் கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அக்குழுவின் அறிக்கையை மேற்கோள் காட்டி 'லே பாரிசியன்' செய்தித்தாள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.
ஊடக அறிக்கையின்படி, அவருக்கும் அக்குழுவின் தலைவர் எட்கர் குரோஸ் பிரானுக்கும் இடையே "சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள்" இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் மேலும் மூன்று நிர்வாகிகள் வெளியேறியதைத் தொடர்ந்து லினெட்டின் பதவி விலகல் நிகழ்ந்துள்ளது.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தற்போது அழுத்தம் கொடுத்து வருவதாகவும், முழுமையாக செயல்படும் ஓர் ஏற்பாட்டுக் குழுவை அமைப்பதற்கு மார்ச் 15-ஆம் தேதியை இறுதி கெடுவாக நிர்ணயித்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
2030ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரெஞ்சு ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் நடைபெறவிருக்கிறது.
-- பெர்னாமா-டிபிஏ
2030 குளிர்கால ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை இயக்குநர் பதவி விலகல்
26 பிப்ரவரி 2026, 1:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைsukankini
உங்கள் கருத்து என்ன?



