சுபாங் ஜெயா மேயர், டத்தோ அமிருல் அசிசான் அப்துல் ரஹீம் கூறுகையில், டெங்கி பரவல் இன்னும் தீவிரமான நிலையில் இருப்பதால், ஐந்து இடங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.
"மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில், தாமான் பிங்கிரான் யு.எஸ்.ஜே 1, பண்டார் கின்ராரா 4, தாமான் புக்கிட் செர்டாங் 5, தாமான் பிங்கிரான் யு.எஸ்.ஜே 2 (பாங்சாபுரி ஸ்ரீ காயான்) மற்றும் பத்து 13, கம்போங் தெங்கா ஏ ஆகிய ஐந்து பகுதிகள் ஹாட்ஸ்பாட் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன."
"இந்த நிலைமை, டெங்கி நோய் பரவல் இன்னும் தீவிரமான கட்டத்தில் இருப்பதையும், அனைத்து தரப்பினரின் கவனமும் தேவை என்பதையும் காட்டுகிறது," என்று அவர் நேற்று முன்தினம் நடைபெற்ற MPSJ மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
ஏடிஸ் கொசுக்கள் பெருகும் இடங்களைக் கண்டறிய, பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் (PPD) மாநகராட்சி மன்றம் நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அமீருல் மேலும் கூறினார்.
"லார்வாசிடிங் மற்றும் புகை தெளித்தல் (fogging) போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கி நோய் பரவல் அதிகரிப்பதை தடுக்கும் இந்த முயற்சிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்," என்றார் அவர்.
அதே வேளையில், கோத்தோங்-ரோயோங் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதன் மூலம் டெங்கி நோய் தடுப்பு முயற்சிகளுக்கு மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கடுமையான சிக்கல்களைத் தவிர்க்க, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
சுபாங் ஜெயா மாநகராட்சி மன்ற (MPSJ) நிர்வாகப் பகுதியில் இந்த ஆண்டின் 15-வது தொற்றுநோயியல் வாரம் (ME) வரையில் 1,098 டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன
1 மே 2026, 2:37 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
527 kes denggi, satu kematian di Kuala Langat setakat Mei, penduduk digesa perangi Aedes
Kathiravan Manoharan
5 ஜூன் 2026

selangor
மழைக்காலத்தில் டிங்கி சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்
Shalini Rajamogun
2 டிசம்பர் 2025

national
டெங்கி ஒழிப்பு சிறந்த பலனை அளித்திருக்கும் WOLBAKIA நடவடிக்கை
Kathiravan Manoharan
29 ஆகஸ்ட் 2025

---
MB terjah dua lokasi hotspot denggi
Unknown Author
25 ஏப்ரல் 2016

வகைselangor
உங்கள் கருத்து என்ன?


