கோத்தா பாரு, ஏப்ரல் 26: இங்குள்ள வக்காப் பாருவில் உள்ள ஃபாலாஹியா தேசிய சமய இடைநிலைப்பள்ளியில் (SMK Agama Falahiah) 17 வயதுடைய ஆண் மாணவர் ஒருவர் ஏழு மீட்டருக்கும் அதிகமான ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்ததில் தலை மற்றும் உடலில் லேசான காயங்களுக்கு உள்ளானார்.
வக்காப் பாரு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) செயல்பாட்டுத் தளபதி அஸ்மி சுலைமான், காலை 9.12 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஆறு வீரர்கள் மற்றும் ஒரு LFRT இயந்திரம் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கூறினார்.
"சுமார் 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்த குழுவினர், பாதிக்கப்பட்டவர் கிணற்றினுள் இருப்பதைக் கண்டனர். கயிறு, ஏணி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது," என அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
வான் அஹ்மத் முக்லிஸ் வான் எம்.டி. ஃபத்லி என்ற அந்த மாணவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, லேசான காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சுகாதாரப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, பாதிக்கப்பட்டவர் சிமெந்தால் செய்யப்பட்ட கிணற்றின் மூடியின் மீது அமர்ந்திருந்தபோது, அவரது உடல் எடையைத் தாங்க முடியாமல் அது உடைந்ததாக நம்பப்படுகிறது.
முன்னர் இந்த கிணறு பள்ளி நிர்வாகத்தால் நிலத்தடி நீர் ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை என்று அவர் கூறினார்.
மீட்புப் பணி காலை 9.34 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, காலை 10.00 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது.
சிமெந்து மூடி உடைந்ததால் ஏழு மீட்டர் ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மாணவர் காயம்
26 ஏப்ரல் 2026, 7:34 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கிளந்தான்: காவல் நிலையப் பொறுப்பாளர்கள் நாளொன்றுக்கு குறைந்தது போதைப்பொருள் தொடர்பான ஒரு கைது நடவடிக்கையாவது மேற்கொள்ள வேண்டும்
Shalini Rajamogun
21 ஜூலை 2026

national
350 கிலோ டுரியன் பழங்களை முறையான ஆவணங்களின்றி கடத்திய இளைஞர் கைது
Shalini Rajamogun
19 ஜூலை 2026

antarabangsa
வழிகாட்டி செயலியை நம்பி பள்ளத்துக்குள் காரை விட்ட சீன நாட்டவர்கள்
Latchumy Ramamoorthy
2 ஜூலை 2026

national
பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணித்து தென் தாய்லாந்திற்குள் குவியும் மலேசியர்கள்
Shalini Rajamogun
14 ஜூன் 2026

வகைpendidikan
உங்கள் கருத்து என்ன?



