சண்டாக்கான், 26 ஏப்ரல்: இங்குள்ள கம்போங் பஹாகியாவில் சுமார் 1,000 வீடுகளைச் சாம்பலாக்கிய ஒரு பெரிய தீ விபத்தில், அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமான போதிலும், ஒரு மசூதி மட்டும் சேதமடையாமல் தப்பியது மக்களுக்கு ஒரு நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது.
நீரின் மேல் அமைந்துள்ள அந்த கிராமத்திற்கு அருகே உள்ள டாருஸ் சலாம் கம்போங் பஹாகியா மசூதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவத்தில் இடது மற்றும் வலதுபுறம் தீயினால் முற்றிலுமாக சூழப்பட்டிருந்த போதிலும், தப்பிப்பிழைத்த கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட வான்வழி புகைப்படங்கள், மசூதியிலிருந்து சுமார் ஒரு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கட்டிடம் முழுவதுமாக எரிந்து சாம்பலானதைக் காட்டுகிறது. எரிந்த மரம் மற்றும் தகரத்தின் மிச்சங்கள் அப்பகுதி முழுவதும் சிதறிக் கிடக்க, மசூதி மட்டும் எந்த சேதமும் இன்றி கம்பீரமாக நிற்கிறது. இந்த பேரழிவுக்கு மத்தியில் நிகழ்ந்த ஓர் அதிசயம் என்று மக்கள் இதைக் கருதுகின்றனர்.
இந்த நிலையை அப்பகுதி மக்கள் நேரில் கண்டதாகவும், இது எதிர்பாராத ஒரு தனித்துவமான நிகழ்வு என்றும் கம்போங் பஹாகியா தலைவர் மற்றும் மசூதியின் தலைவருமான ஷரிஃப் ஹசிம் ஷரிஃப் டிட்டிங் கூறினார்.
“தீ மசூதியைச் சூழ்ந்திருந்ததை நான் என் கண்ணால் கண்டேன். சுற்றியுள்ள அனைத்து வீடுகளும் எரிந்துவிட்டன, ஆனால் இந்த மசூதிக்குச் சிறிதும் பாதிப்பில்லை.”
“நெருப்பு மசூதியை நெருங்கும் போது, அது விலகிச் செல்வது போல் இருந்தது. அங்கு இருந்த நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம், ஆனால் இந்த வழிபாட்டுத் தலம் இன்னும் உறுதியாக நிற்பதைக் கண்டு bersyukur (நன்றியுடன்) இருக்கிறோம்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
1984-ஆம் ஆண்டு முதல் இந்த மசூதி இருப்பதாகவும், சபா முன்னாள் முதலமைச்சர் துன் ஹாரிஸ் சல்லேவின் நிர்வாகத்தின் போது கம்போங் பஹாகியா நிறுவப்பட்டதோடு சேர்ந்து இது கட்டப்பட்டது என்றும் ஷரிஃப் ஹசிம் கூறினார். 7,520 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வழிபட முடியும்.
கடந்த நான்கு தசாப்தங்களாக, இந்த மசூதி உள்ளூர் சமூகத்தினர் சமயக் கல்வியைப் பெறுவதற்கான மையமாகத் திகழ்ந்ததுடன், குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகையின் போது எப்போதும் வழிபாட்டாளர்களால் நிரம்பியிருக்கும் என்று ஷரிஃப் கூறினார்.
இப்போது, இந்த மசூதி ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிப் பொருட்களைச் சேகரித்து வைக்கும் மையமாகவும் செயல்படுகிறது. இது இந்த இக்கட்டான நேரத்தில் சமூகத்தின் உயிர்நாடியாகத் தொடர்ந்து அதன் பங்கை பிரதிபலிக்கிறது.
தீ விபத்தின் அந்த திகிலூட்டும் தருணத்தை நினைவு கூர்ந்த ஷரிஃப் ஹசிம், தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த போது, டாருஸ் சலாம் மசூதியிலிருந்து சுமார் 15 நிமிடங்கள் தொழுகைக்கான அழைப்பான ‘அஸான்’ ஒலித்ததாகவும் கூறினார்.
இதற்கிடையில், 1984 முதல் கிராமத்தில் வசிக்கும் 46 வயதான டிமார் ஹுசைன் என்ற மற்றொரு குடியிருப்பாளரும் இந்த சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறினார்.
“என் கண்களால், தீ இப்பகுதியைச் சூழ்ந்திருப்பதை நான் கண்டேன். பின்னால் இருந்த வீடுகள் அனைத்தும் எரிந்துவிட்டன, ஆனால் இந்த மசூதி மட்டும் உறுதியாக நின்றது.”
“இது மிகவும் விசித்திரமாக இருந்தது, ஆனால் இதை நாங்கள் இறைவனின் பெருமையாகக் கருதுகிறோம்,” என்று மீன் வியாபாரியான அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த கோர விபத்தில், கம்போங் பஹாகியா நீர்ப் பகுதி கிராமம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.
கம்போங் பஹாகியாவில் சுமார் 1,000 வீடுகளைச் சாம்பலாக்கிய தீ ஒரு மசூதி'யை மட்டும் சேதமடையாமல் விட்டுவைத்தது எப்படி?
26 ஏப்ரல் 2026, 3:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சண்டாகானில் தீ விபத்து: 84 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்
Shalini Rajamogun
19 மே 2026

national
சண்டாக்கான் தீ விபத்து: பேரிடர் நிலை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது – மாவட்டப் பேரிடர் மேலாண்மை குழு
Shalini Rajamogun
6 மே 2026

national
சண்டாக்கான் தீ விபத்து: மாணவர்களுக்குத் தலா 300 ரிங்கிட் சிறப்பு உதவி – கல்வி அமைச்சு நடவடிக்கை
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

national
சண்டாக்கான் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆவண மாற்று, ரிம300 கல்வி உதவி
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



