ஷா ஆலாம், ஏப்ரல் 25: கழிவுநீர்க் கால்வாய்களைச் சுத்தம் செய்யும் ஒப்பந்தக்காரர்கள் தங்கள் பணிகளை முழுமையாகச் செய்யாவிட்டாலும் முழுப் பணம் பெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை காஜாங் நகராண்மைக் கழகம் (MPKj) மறுத்துள்ளது.
மாறாக, நிர்ணயிக்கப்பட்ட வேலை விவரக்குறிப்புகளுக்கு இணங்கத் தவறிய ஒப்பந்தக்காரர்கள் மீது அபராத நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதன் பெருநிறுவன மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை விளக்கியுள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டு முழுவதும், 118 பணித் தவறுதல் அறிவிப்புகள் (Notis Kegagalan) வழங்கப் பட்டு, அதன் மூலம் மொத்தம் RM136,115.75 பிடித்தம் செய்யப் பட்டுள்ளது.
"களத்தில் பணிகள் முழுமையாக நடைபெறாதபோதும் ஒப்பந்தக்காரர்களுக்கு முழுப் பணம் வழங்கப்படுவதாகக் கூறப்படுவது உண்மையல்ல. ஒப்பந்தத்தில் உள்ளபடி, விதிமீறல்கள் நடந்தால், அபராத நடவடிக்கையாக காஜாங் நகராண்மைக் கழகம் பணித் தவறுதல் அறிவிப்பை வெளியிடும்," என்று அது மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தது.
"ஒவ்வொரு ஒப்பந்தக்காரருக்கான கொடுப்பனவும், களத்தில் மேற்பார்வை அதிகாரிகளால் பணிகள் உறுதி செய்யப்பட்ட பின்னரே வழங்கப்படும்," என்று அது மேலும் கூறியது.
பணித் தவறுதல் அறிவிப்புகள் வழங்குவது மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுப்பனவில் பிடித்தம் செய்வது உட்பட, எந்தவொரு விதிமீறலுக்கும் எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று காஜாங் நகராண்மைக் கழகம் உறுதியளித்தது.
"தொழில்நுட்ப அதிகாரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு, உள் தணிக்கை மற்றும் பொதுமக்கள் புகார் செய்வதற்கான வழிமுறை மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப் படுகிறது."
"ஒவ்வொரு ஒதுக்கீடும் முறையாகவும், வெளிப்படையாகவும் செலவிடப்பட்டு, குடியிருப்பாளர்களுக்கு அதிகபட்ச நன்மையை வழங்குவதை உறுதி செய்ய ஒப்பந்தக்காரர்க-ளின் செயல்திறன் அவ்வப்போது மதிப்பிடப் படுகிறது," என்று அது குறிப்பிட்டது.
ஏப்ரல் 14ஆம் தேதி 'தி ஸ்டார்' நாளிதழில் 'Drains choked with grime, rodents' என்ற தலைப்பில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
# #BeritaTamil
original news : https://www.mediaselangor.com/ms/2026/04/353865
Photo link if have :
விவரக்குறிப்புகளைப் பின்பற்றத் தவறிய ஒப்பந்தக்காரர்கள் மீது அபராத நடவடிக்கை: காஜாங் நகராண்மைக் கழகம்
25 ஏப்ரல் 2026, 10:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கிள்ளானில் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தை: வேலை தேடுவோருக்கு அழைப்பு
Media Selangor Team
4 செப்டெம்பர் 2026

selangor
RS-2 ஏகமனதாக ஏற்பு : 2030 வரையிலான சிலாங்கூரின் பொருளாதார கொள்கையாக அமையும்
Norrasyidah Arshad
13 ஆகஸ்ட் 2026

selangor
ஆகஸ்ட் 30, காஜாங் அரங்கில் சிலாங்கூர் மாநில அளவிலான 2026 தேசிய தினக் கொண்டாட்டம்
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

selangor
RM500 பில்லியன் பொருளாதாரத்தைத் தாண்டிய முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது
Media Selangor
11 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



