ஷா ஆலம், ஏப்ரல் 23 - சிலாங்கூரில் 2023 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 503 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக, மாநில சமூக நல ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கையில், 445 புகார்கள் பெண்களையும், 58 புகார்கள் ஆண்களையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார். இருப்பினும், புகாரளிக்கப்படாத குடும்ப வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எதுவும் இல்லை.
"பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்கவும், உரிய உதவியைப் பெறவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு விழிப்புணர்வு மற்றும் பிரச்சார முயற்சிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் குடும்ப வன்முறை தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களைக் கோரிய புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங்கின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அன்ஃபால் இவ்வாறு கூறினார்.
பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு எதிரான களங்கத்தைக் குறைத்து, அவர்கள் உதவி நாடி முன்வரச் செய்யும் மாநில அரசின் முயற்சிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்ஃபால், 'வனிதா பெர்டாயா சிலாங்கூர்' அமைப்பு 2021-ஆம் ஆண்டு முதல் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) எதிரான பிரச்சாரத்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இப்பிரச்சாரம் பெண்களை மட்டும் மையப்படுத்தாமல், ஆண்களும் குழந்தைகளும் கூட வன்முறையால் பாதிக்கப்படலாம் என்பதை வலியுறுத்தும் ஒரு உலகளாவிய முயற்சியாகும் என்று அவர் விளக்கினார்.
"பெண்கள் மட்டுமே குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்ற களங்கத்தை அகற்றும் நோக்கில், பிரச்சாரப் பொருட்கள் பெண்களை மட்டும் குறிவைக்காமல் பொதுவானதாக தயாரிக்கப்பட்டுள்ளன," என்றார்.
"இந்த ஆண்டு, 'பாலின அடிப்படையிலான வன்முறையை நிறுத்துங்கள்' எனும் பிரச்சாரம், ஜூன் 2026 முதல் நவம்பர் 2026 வரை நடைபெறவுள்ள 'ஜெலாஜா வனிதா சிலாங்கூர்' நிகழ்வின் மூலம் ஐந்து தொடர் விழிப்புணர்வுத் திட்டங்களாக விரிவாக நடத்தப்படும்.
"இந்த விழிப்புணர்வுத் தொடரில், சமூக நலத்துறை, மாநில சுகாதாரத் துறை மற்றும் மலேசிய காவல்துறை (PDRM) போன்ற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் பொறுப்புள்ள அமைப்புகளும் பங்கேற்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூரில் 503 குடும்ப வன்முறைப் புகார்கள்: பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களும் அடக்கம்
23 ஏப்ரல் 2026, 9:06 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
புகைமூட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 4 பாரா சுக்மா போட்டிகள் கடும் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கின
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

selangor
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

selangor
RS-2 திட்டம்: கல்வி, வாழ்க்கைச் செலவின விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



