ஜோர்ஜ் டவுன்: கெடா, கூலிம் பகுதியில் அண்மையில் கைது நடவடிக்கையின் போது, காவலர் ஒருவர் ஆடவர் ஒருவரின் தலையை மிதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை என இரண்டு இணை விசாரணைகள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தண்டனைச் சட்டம் பிரிவு 323 மற்றும் பிரிவு 427-இன் கீழான குற்றவியல் விசாரணையும், உள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் முடிவடைந்த பின்னர், அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேசிய காவல்துறை துணைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.
"இரண்டு விசாரணைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே, விசாரணையை முடிக்க காவல் துறைக்கு அவகாசம் கொடுங்கள். அதன் முடிவுகளும், அடுத்தகட்ட நடவடிக்கைகளும் பின்னர் அறிவிக்கப் படும்," என்று அவர் பினாங்கு குற்ற மற்றும் பொதுப் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் தெரிவித்தார்.
மேலும், தவறிழைக்கும் எந்தவொரு அதிகாரி அல்லது காவலரையும் ராயல் மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்) பாதுகாக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
கைது நடவடிக்கைகளுக்கான நிலையான நடைமுறைகள் (SOP) ஏற்கனவே வகுக்கப் பட்டுள்ளன என்றும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பலத்தைப் பயன் படுத்த அவை அனுமதிக்கின்றன என்றும் அயோப் கான் குறிப்பிட்டார்.
இருப்பினும், சந்தேக நபரின் நடவடிக்கைகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் போது, பயன்படுத்தப்படும் பலத்தின் அளவு மாறு படலாம் என்றும், அது அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்து மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"நிச்சயமாக SOP உள்ளது, சந்தேக நபர் எதிர்க்கும் போது காவலர்கள் குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அந்தப் பலம் நியாயமானதாக இருக்க வேண்டும். சில நேரங்களில், இதில் ஒரு தெளிவற்ற நிலை உள்ளது, பயன்படுத்தப்பட்ட பலத்தின் அளவை நாங்கள் ஆராய வேண்டியுள்ளது," என்று அவர் விளக்கினார்.
"சந்தேக நபரின் எதிர்ப்பு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தால், நாங்கள் குறைந்தபட்ச பலத்தை மட்டும் பயன்படுத்த முடியாது, அதைவிட பலம் தேவைப்படலாம்," என்றார்.
முன்னதாக, கூலிம், ஜாலான் துங்கு புத்ராவில் உள்ள மோட்டார் சைக்கிள் உபகரணங்கள் விற்கும் கடைக்கு முன்பாக, குற்றத் தடுப்பு ரோந்து நடவடிக்கையின் போது இந்தச் சம்பவம் நடந்ததை பி.டி.ஆர்.எம் உறுதிப்படுத்தியது.
சமூக ஊடகங்களில் பரவிய 29 வினாடி காணொளியில், ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுக்கப்பட்டு, பின்னர் ஒரு காவலர் அவரது தலையை மிதிப்பது பதிவாகியிருந்தது என கூலிம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் டிஎஸ்பி தெங்கு முகமட் ஃபைசல் தெங்கு யெங் கூறியிருந்தார்.
ஒரு கைது நடவடிக்கையில் சந்தேக நபரின் எதிர்ப்பு போலீசாருக்கு அச்சுறுத்தலாக இருந்தால், அவர்கள் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்த முடியாது
23 ஏப்ரல் 2026, 8:43 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
வட மாநில இந்திய இளைஞர்களுக்கான ‘மலேசியா மடாணி’ தேசியத்துவப் பயிற்சி மற்றும் தலைமைத்துவ முகாம்
Pakiya
16 மார்ச் 2026

national
ஊடகங்களையும், உள்ளூர் அரசியலையும் சீர்குலைக்க பெரும் செல்வந்தர்கள் சிலரின் சதி - பிரதமர் அன்வார் எச்சரிக்கை
Pakiya
8 மார்ச் 2026

video
Selangor Prihatin Programme Fixes Termite-Ruined Kinrara Home
Kathiravan Manoharan
26 ஆகஸ்ட் 2026

video
Menteri Besar Incorporated (MBI) gives a special wheelchair to Mithyraa Devi
Kathiravan Manoharan
18 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



