இஸ்ரேலிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பேற்கக் கோரி, மலேசிய மனித உரிமை அமைப்பு ஒன்று சர்வதேச சட்டக் கூட்டமைப்பில் இணைந்துள்ளது.
மனித உரிமைகள் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மையம் (CENTHRA), பிரசல்ஸில் நடைபெற்ற குளோபல் சுமுட் நாடாளுமன்ற மாநாட்டின் போது, வேவ்ஸ் ஆஃப் ஃப்ரீடம் பிரான்ஸ் (Waves of Freedom France), மனித உரிமைகள் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மையம், மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சர்வதேச சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களுக்காக வழக்குத் தொடர, சர்வதேச சட்ட ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.
பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்டத்தை உருவாக்கியதில் இஸ்ரேலிய அதிகாரிகளின் பங்கு குறித்து, பிரான்சில் சட்டப்பூர்வ புகார் தாக்கல் செய்யப்பட்ட அதே வேளையில் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சட்டக் கட்டமைப்புகளையும் சர்வதேச ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் இந்த மாநாட்டில் தங்கள் அமைப்பின் பங்கேற்பு கவனம் செலுத்துகிறது என்று செந்தராவின் நிறுவனர் மற்றும் தலைவர் அஸ்ரில் முகமட் அமீன் கூறினார்.
"இந்த இரு கூட்டமைப்புகளும் சட்ட அம்சங்களில் மிகவும் உறுதியாக உள்ளன. உண்மையில், கடந்த வாரத்தில் இஸ்ரேலிய தனிநபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பல குற்றவியல் நடவடிக்கைகளை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
பிரசல்ஸில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே சர்வதேச வலையமைப்பை வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
"இந்த வலுவான வலையமைப்பின் மூலம், பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்கவும், இஸ்ரேல் மீது வழக்குத் தொடரவும் நாம் எடுக்கும் முயற்சிகள் மேலும் வெற்றிகரமாகவும் வலுவாகவும் அமையும் என நம்புகிறோம்," என்றார்.
உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கையை நேரடியாகச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளை எதிர்கொண்ட போதிலும், இஸ்ரேல் செய்த குற்றங்களுக்காக வழக்குத் தொடர செந்த்ரா மற்ற நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கும் என்று அஸ்ரில் கூறினார்.
"சில தடைகள் காரணமாக மலேசியாவில் உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கையை நேரடியாக செயல் படுத்த முடியா விட்டாலும், சர்வதேச கடல் பகுதியில் தடுத்து வைக்கப் பட்டு கடத்தப் பட்ட 'குளோபல் சுமுட் புளோட்டிலா'வில் பங்கேற்ற மலேசியர்களுக்காக நீதி கோரும் நடவடிக்கையை மலேசியா தொடங்கும்," என்றார் அவர்.
இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு எதிரான சர்வதேச சட்ட நடவடிக்கையில் மலேசிய மனித உரிமை அமைப்புகள் பங்கேற்பு
23 ஏப்ரல் 2026, 2:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
புதிய சீர்திருத்தங்கள் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பாலஸ்தீனம்; அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல்
Shalini Rajamogun
15 ஜூன் 2026

antarabangsa
பாலஸ்தீனத்தின் வரி வருவாயைப் பறிமுதல் செய்யும் இஸ்ரேலிய சட்ட மசோதாவுக்கு OIC கடும் கண்டனம்
Shalini Rajamogun
11 ஜூன் 2026

antarabangsa
காசா சுகாதார நெருக்கடி: சிகிச்சைக்காக காத்திருக்கும் 20,000 நோயாளிகள்
Mavitthran
16 பிப்ரவரி 2026

national
சில பாலஸ்தீன உணவுப் பொருள்களுக்கு வரி விலக்கு - மலேசியா ஒப்புதல்
Rajah Ramaya
19 செப்டெம்பர் 2025

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?

