ஷா ஆலம், ஏப். 22: இன்வெஸ்ட் சிலாங்கூர், மாநிலத்தில் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பல்வேறு உத்திகளைத் தீவிரமாக வகுத்து வருகிறது.
அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் கூறுகையில், சிலாங்கூரின் தொழில்துறை சூழலை வலுப்படுத்தும் திறன் கொண்ட உயர் தொழில்நுட்பத் தொழில்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார்.
“உண்மையில், இந்த ஆண்டு நாங்கள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். தொழில்துறையினருடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடருவோம், மேலும் முதலீடுகளை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுப்போம்.”
“குறிப்பாக, தற்போதைய தொழிற்பூங்கா மேம்பாட்டாளர்களுடன் இணைந்து உற்பத்தித் துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவோம்.”
“இந்த ஆண்டு சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொழிற்பூங்கா மேம்பாட்டாளர்களுடன் இணைந்து முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டங்கள் உட்படச் சிறப்புத் திட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
மாநில அரசு பெற்ற முதலீடுகள் குறித்து மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, உற்பத்தித் துறை மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புவதாகவும் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஆண்டு சிலாங்கூரில் பொருளாதார நடவடிக்கைகள் 83.9 பில்லியன் ரிங்கிட் முதலீட்டைப் பதிவு செய்துள்ளதாக சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் தெரிவித்தார். இது 65 பில்லியன் ரிங்கிட் என்ற இலக்கைத் தாண்டி, 18.9 பில்லியன் ரிங்கிட் அதிகரிப்பாகும்.
தற்போது மாநிலப் பொருளாதாரத்தில் 21.6 விழுக்காடு பங்களிக்கும் உற்பத்தித் துறையை, குறிப்பாக உயர் தொழில்நுட்பத் துறையில் புதிய முதலீடுகள் மூலம் விரிவுபடுத்துவதற்குப் பெரும் ஆற்றல் இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எனவே, வணிக நடவடிக்கைகளை எளிதாக்கவும், அதன் மூலம் சிலாங்கூருக்கு முதலீட்டாளர்களை ஈர்க்கவும் ‘ஸ்பீட் சிலாங்கூர்’ (Speed Selangor) முயற்சி மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உயர் தொழில்நுட்பத் தொழில்துறையில் கவனம், முதலீட்டாளர்களை ஈர்க்க இன்வெஸ்ட் சிலாங்கூர் தீவிரம்
22 ஏப்ரல் 2026, 5:29 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சிங்கப்பூர் பயணம் சிலாங்கூருக்கு அந்நிய முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கிறது
Shalini Rajamogun, Norrasyidah Arshad
11 ஜூன் 2026

national
33.5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை ஈர்த்து சிலாங்கூர் சாதனை
Shalini Rajamogun
11 ஜூன் 2026

selangor
சிலாங்கூரில் RM80 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள், 60,000 புதிய வேலைவாய்ப்புகள் பதிவு
Shalini Rajamogun, Norrasyidah Arshad
18 மே 2026

selangor
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாகச் சிலாங்கூர் விளங்குகிறது
Shalini Rajamogun, Adam Azman
15 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



