கிளந்தான், கோல கிராய், கம்போங் மியாக்கில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை நடத்தப்பட்ட சோதனையில், ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பெரித்தா ஹரியான் அறிக்கையின்படி, பொதுப் பணிப் படையின் (PGA) 8 வது பட்டாலியன் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழுவினர், ‘ஓப்ஸ் பெர்செபாடு கசானா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாலை 6.45 மணியளவில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
பொதுப் பணிப் படையின் தென்கிழக்கு பிரிகேட் தளபதி, மூத்த உதவி ஆணையர் அஹ்மத் ராட்ஸி ஹுசைன், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் பாகங்களைச் சேமித்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே இந்தச் சோதனை நடத்தப் பட்டதாகக் கூறினார்.
“இந்தச் சோதனை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) மற்றும் வனத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு வகையான ஐந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.”
“அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைக்காக அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்றார் அவர்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேக நபரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக குவா மூசாங் மாவட்ட காவல் துறைத் தலைமையகத்திற்கு (IPD) கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்த பெண்மணி கைது: பொது பாதுகாப்புப் படையினர் அதிரடி
21 ஏப்ரல் 2026, 1:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கிளந்தான்: காவல் நிலையப் பொறுப்பாளர்கள் நாளொன்றுக்கு குறைந்தது போதைப்பொருள் தொடர்பான ஒரு கைது நடவடிக்கையாவது மேற்கொள்ள வேண்டும்
Shalini Rajamogun
21 ஜூலை 2026

national
350 கிலோ டுரியன் பழங்களை முறையான ஆவணங்களின்றி கடத்திய இளைஞர் கைது
Shalini Rajamogun
19 ஜூலை 2026

antarabangsa
வழிகாட்டி செயலியை நம்பி பள்ளத்துக்குள் காரை விட்ட சீன நாட்டவர்கள்
Latchumy Ramamoorthy
2 ஜூலை 2026

national
பாதுகாப்பு எச்சரிக்கைகளைப் புறக்கணித்து தென் தாய்லாந்திற்குள் குவியும் மலேசியர்கள்
Shalini Rajamogun
14 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



