ஷா ஆலம்: பந்திங் சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட சுமார் 200 குடியிருப்பாளர்கள், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற 'பிரிஹாத்தின் கம்போங் பாரு' திட்டத்தின் மூலம் அரிசி மற்றும் சமையலறைப் பொருட்களை உதவியாகப் பெற்றனர்.
இந்தச் சமூகத் திட்டம், உள்ளூர் மக்களிடையே மறுசுழற்சி முயற்சியை ஊக்குவிப்பதன் மூலம் நீடித்த நிலைத்தன்மை கூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது.
தேவை உள்ளவரின் சுமையைக் குறைப்பதே இந்த உதவியின் நோக்கம் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு கூறினார்.
"வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் வகையில் 200 பேர் அரிசி மற்றும் சமையல் பொருட்களைப் பெற்றனர்," என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
ஜெஞ்சாரோம் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு (JPKK) மற்றும் துங் லோ சுங்கை ஜாரோம் ஆலய சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில், மறுசுழற்சி கலாச்சாரத்தைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கும் வகையில் சமூக மறுசுழற்சி மையம் ஒன்றும் தொடங்கப் பட்டது.
"திடக்கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் காகிதம், செய்தித்தாள்கள், புத்தகங்கள், பெட்டிகள், சஞ்சிகைகள் மற்றும் பயன்படுத்திய ஆடைகள் போன்ற பொருட்களை அனுப்புமாறு குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்," என்றார் அவர்.
இந்தத் தொடர் முயற்சி, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, மேலும் வளமான மற்றும் நீடித்த ஒரு சமூகத்தை உருவாக்க உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
வாழ்க்கைச் செலவினச் சுமையைக் குறைக்க , 200 பந்திங் குடியிருப்பாளர்களுக்கு உதவி
19 ஏப்ரல் 2026, 5:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கிள்ளானில் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தை: வேலை தேடுவோருக்கு அழைப்பு
Media Selangor Team
4 செப்டெம்பர் 2026

selangor
சிலம்ப விளையாட்டின் வளர்ச்சி ; நிதி ஒதுக்கீட்டுக்கான முயற்சிகள் எடுக்கப்படும் - பாப்பாராய்டு
Evelyn Moses
28 ஆகஸ்ட் 2026

selangor
மனித இயந்திர தொலையியக்கம், செயற்கை நுண்ணறிவு திறன்கள் வேலை வாய்ப்பை அதிகரிக்கும்
Evelyn Moses
27 ஆகஸ்ட் 2026

selangor
பந்திங் தொகுதியில் ஓய்வூதியம் பெறாத 36 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச்சீட்டு
Media Selangor Team
16 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



