ஷா ஆலாம், ஏப்ரல் 19: மத்திய மண்டலத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வெளிநாட்டினர் உட்பட உரிமம் இல்லாத வியாபாரிகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைச் சிப்பாங் நகராண்மைக் கழகம் (MPSepang) தீவிரப் படுத்தியுள்ளது.
சட்டத்திற்குக் கீழ்ப்படிவதை உறுதி செய்வதற்கும், பொது ஒழுங்கைப் பேணுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த உள்ளூராட்சி மன்றம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சாலாக் பெர்டானா, தாமான் டாலியா, நீலாய் நெடுஞ்சாலை, லாபோஹான் டகாங் மற்றும் அரேனா வாரிசான் உள்ளிட்ட பல இடங்கள் அடங்கும்.
செல்லுபடியாகும் உரிமம் இல்லாத வணிக நடவடிக்கைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
"இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக, நான்கு நோட்டீஸ் கொம்பவுன்கள் (NTK) வழங்கப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறிய வெளிநாட்டு வியாபாரிகளுக்கு எதிராக மூன்று பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன."
"செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குற்றத்திற்காக, சிறு வியாபாரிகள் மீதான துணைச் சட்டம் (சிப்பாங் நகராண்மைக் கழகம்) 2007, பிரிவு 3-இன் கீழ் இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது," என்று பேஸ்புக் வாயிலாக அது தெரிவித்தது.
இதற்கிடையில், வியாபாரிகள் விதிமுறைகள் மற்றும் துணைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன் செல்லுபடியாகும் உரிமத்தைப் பெறுமாறு MPSepang அறிவுறுத்தியுள்ளது.
நிர்வாகப் பகுதி எப்போதும் ஒழுங்காகவும், பாதுகாப்பாகவும், உரிமம் இல்லாத வியாபார நடவடிக்கைகளிலிருந்தும் விடுபட்டிருப்பதை உறுதிசெய்ய, அமலாக்க நடவடிக்கைகள் அவ்வப்போது தொடரும் என்று அந்த உள்ளூராட்சி மன்றம் மேலும் தெரிவித்தது.
வெளிநாட்டினர் உட்பட வியாபார உரிமம் இல்லாதவர்களுக்கு எதிராக சிப்பாங் நகராண்மைக் கழகம் அமலாக்க நடவடிக்கை.
19 ஏப்ரல் 2026, 5:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
புகைமூட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 4 பாரா சுக்மா போட்டிகள் கடும் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கின
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

selangor
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

selangor
RS-2 திட்டம்: கல்வி, வாழ்க்கைச் செலவின விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



