ஷா ஆலம், ஏப்ரல் 18: சந்தை விலை டீசலால் 15 விழுக்காடு மக்கள் மட்டுமே பாதிக்கப் பட்டுள்ளனர், மீதமுள்ள 85 விழுக்காட்டினர் இன்னும் மானிய விலையின் பலனை அனுபவித்து வருகின்றனர்.
பெரும்பான்மையான மக்கள் இன்னும் அரசாங்க மானியத்தின் பலனைப் பெற்று வருகின்றனர் என்பதை விளக்காமல், சில தரப்பினர் டீசல் விலை உயர்வு பிரச்சினையை அடிக்கடி எழுப்பி வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"டீசல் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் எழுப்புகிறார்கள், அதை நான் ஒப்புக் கொள்கிறேன். போக்குவரத்துத் துறை உட்பட டீசல் விலை உயர்வால் சிலர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
"இருப்பினும், ஆய்வுகளின்படி, 15 விழுக்காடு மக்கள் மட்டுமே சந்தை விலையில் டீசல் வாங்குகிறார்கள், மீதமுள்ள 85 விழுக்காட்டினர் மானிய விலையில் வாங்குகிறார்கள் என்று தெரிகிறது," என்று அவர் கூறினார்.
கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் (LTSIP) புதிய முனையத்தை இன்று திறந்து வைத்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் கிளந்தான் மந்திரி பெசார் டத்தோ முகமட் நசுருடின் டாட் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் கருத்து தெரிவித்த அன்வார், டீசல் விலை உயர்வால் மீனவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி சிலர் கோபப் படுகிறார்கள், ஆனால் அந்தப் பிரிவினர் மானிய விலையில்தான் டீசல் வாங்குகிறார்கள் என்று விளக்கினார்.
"எனவே அப்படிப்பட்ட உதாரணங்களைக் கொடுக்காதீர்கள். மக்களின் சுமையைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? ஆம், மக்களின் சுமையைத் தணிப்பதற்கான வழிகளைக் கண்டறிய ஒவ்வொரு நாளும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்," என்றார் அவர்.
டீசல் விலை 15 விழுக்காடு மக்களை மட்டுமே பாதித்துள்ளது.
18 ஏப்ரல் 2026, 4:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
புகைமூட்டம்: சிலாங்கூரில் 5 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம்
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

national
ஏஐ தொழில்நுட்பத்தில் அமலாக்கத் துறைகள் பின்தங்கக் கூடாது
Media Selangor Team
4 செப்டெம்பர் 2026

national
கூடுதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் திட்டமில்லை: அமைச்சர் ரமணன்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

national
செப். 9 வரை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு
Bernama
3 செப்டெம்பர் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



