ஷா ஆலம், ஏப்ரல் 16: கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் டீசல் விலை அதிகரிப்பு போன்ற சவால்கள் இருந்தபோதிலும், மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் மலிவு விலை வீட்டுத் திட்டங்கள் கைவிடப்படும் அபாயத்தை எதிர்நோக்கவில்லை.
இருப்பினும், இந்த திட்டங்கள் முன்பு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட நிறைவடைய அதிக காலம் ஆகலாம் என்று வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா ஒப்புக்கொண்டார்.
"ஒரு திட்டம் கைவிடப்படுமானால், அதை நாம் முன்கூட்டியே கணிக்க முடியும். எடுத்துக்காட்டாக, மேம்பாட்டு நிறுவனத்தின் பின்னணியில் இருந்து இதை அறியலாம். திட்டங்கள் கைவிடப்படும் அபாயம் குறைவு என்றே நான் கருதுகிறேன்."
"நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட சற்று தாமதமாகலாம். தற்போதைய நிலவரப்படி, அனைத்து திட்டங்களும் வழக்கம்போல் நடைபெறுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் காரணமாக சவால்களை எதிர்கொள்ளும் மலிவு விலை வீட்டு மேம்பாட்டாளர்களுக்கு மாநில அரசு உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.
"இந்த நெருக்கடியின் தாக்கம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கலாம். ஆனால் இதுவரை மேம்பாட்டாளர்களிடமிருந்து எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. ஒருவேளை புகார்கள் வந்தால், நாங்கள் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்குவோம்."
"உதாரணமாக, திட்டங்களை முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கலாம். அவர்கள் திட்டத்தின் முன்னேற்றத்தை மறுசீரமைக்க விரும்பினால், அது குறித்தும் நாங்கள் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம்," என்றார்.
பிப்ரவரி 28 முதல் மேற்கு ஆசியாவில் மோதல் நீடித்து வருகிறது. இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் சமாதான உடன்படிக்கையை எட்டாததால், ஏப்ரல் 8 முதல் இரண்டு வார கால போர்நிறுத்தம் இருந்தபோதிலும் மோதல் தொடர்கிறது.
சிலாங்கூரில் மலிவு விலை வீட்டுத் திட்டங்கள் எதுவும் கைவிடப்படாது
16 ஏப்ரல் 2026, 9:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மோரிப் ‘ரூமா சிலாங்கூர் கூ’ வீட்டுத்திட்டத்தை மீட்கப் புதிய மேம்பாட்டாளருக்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது
Shalini Rajamogun
7 ஜூன் 2026

national
கம்போங் தெலோக் கோங்கில் இரு வீடுகள் தீக்கிரை
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூரில் குறைந்த விலை வீடுகளின் பராமரிப்புக்கு 21.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
Shalini Rajamogun
24 ஜூலை 2026

national
பெர்ச்சாமில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மூடப்பட்டன- காவல்துறை
Evelyn Moses
21 ஜூன் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



