அம்பாங் ஜெயா, ஏப்ரல் 14: வரலாற்றில் முதன்முறையாக, அம்பாங் ஜெயா மாநகராட்சி (MPAJ) கடந்த ஆண்டு RM15 மில்லியன் வருவாய் உபரியைப் பதிவு செய்துள்ளது. இது உள்ளூர் அதிகார சபையின் வரலாற்றில் மிக உயர்ந்த சாதனையாகும்.
MPAJ நிர்ணயிக்கப்பட்ட RM170 மில்லியன் இலக்கைத் தாண்டி, மொத்தம் RM185 மில்லியன் வருவாயை ஈட்டியதைத் தொடர்ந்து இந்தச் சிறந்த செயல்திறன் பதிவு செய்யப் பட்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் ஹஸ்ரோல் நிஜாம் ஷாரி தெரிவித்தார்.
தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில், இந்த வருவாய் உபரியை அடுத்த சில ஆண்டுகளுக்குத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"இந்த உபரி வருவாய், பொது வசதிகளை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பு பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சமூக நலத் திட்டங்களை தீவிரப்படுத்தவும் முழுமையாகப் பயன்படுத்தப்படும்," என்று நேற்று இரவு நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான MPAJ சிறந்த சேவை விருது (APC) வழங்கும் விழாவில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
MPAJ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த விழாவை, சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மத் ஃபட்லி அஹ்மத் தஜுடின் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மேலும், தனது நிர்வாகப் பகுதிக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, சேவை விநியோகத்தின் தரத்தை தொடர்ந்து வலுப்படுத்த MPAJ உறுதியுடன் உள்ளது என்றும் ஹஸ்ரோல்நிஜாம் கூறினார்.
"தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், குறிப்பாக ஆற்றல் தொடர்பான பிரச்சினைகளுக்கு கூட்டு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. எனவே, நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைப்போம்," என்றார்.
"அம்பாங் ஜெயா சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தூய்மை மற்றும் பிற வசதிகள் தொடர்பான சேவைகளின் தரத்தை MPAJ மேம்படுத்தும்," என்றும் அவர் மேலும் கூறினார்.
அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் 15 மில்லியன் வெள்ளி உபரி வருமானம் ஈட்டி சாதனை
14 ஏப்ரல் 2026, 4:48 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
2028க்குள் 200,000 ருமா சிலாங்கூர் கூ வீடுகள்; இலக்கை எட்ட மாநில அரசு நம்பிக்கை
Sofia Nasir
13 அக்டோபர் 2026

selangor
நகர்ப்புறங்களில் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்க, வண்டல் பொறிகள் பொருத்தும் திட்டம்
Pakiya
30 ஏப்ரல் 2026

selangor
செயல்திறனை அதிகரிக்க, நிர்வாகத்தை வலுப்படுத்த, வள இழப்புகளைச் சமாளிக்கவும் சிலாங்கூர் 'சேவை வழங்கல் தரக் குறியீடு' முறையை அறிமுகப் படுத்தவுள்ளது
Pakiya
14 ஏப்ரல் 2026

national
சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் இன்று பிற்பகல் வரை பலத்த மழை எச்சரிக்கை
Pakiya
14 ஏப்ரல் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



