ஷா ஆலாம், ஏப்ரல் 14: சிலாங்கூர், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் ஜொகூரில் உள்ள பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) வெளியிட்ட அறிக்கையின்படி, சிலாங்கூரில் சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர் மற்றும் கிள்ளான் மாவட்டங்கள் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பேராக்கில் மஞ்சோங், பேராக் தெங்கா, பாகன் டத்தோக் மற்றும் ஹிலீர் பேராக் ஆகிய இடங்களும், பகாங்கில் பெந்தோங் பகுதியும் இந்த வானிலையை எதிர்கொள்ளும்.
இதற்கிடையில், கெடாவில் லங்காவி, பினாங்கில் பாராத் டாயா மற்றும் தீமோர் லாவூட், ஜொகூரில் தங்காக் மற்றும் மூவார் ஆகிய பகுதிகளிலும் இதே போன்ற வானிலை நிலவும்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அல்லது நிகழும் என எதிர்பார்க்கப்படும் இடியுடன் கூடிய மழையின் அறிகுறிகள் மற்றும் மழையளவு மணிக்கு 20 மி.மீ.க்கு அதிகமாக இருக்கும்போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெற, பொதுமக்கள் எப்போதும் MetMalaysia-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my-ஐப் பார்க்கவும், அவர்களின் சமூக ஊடகங்களைப் பின்தொடரவும், myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிலாங்கூரின் மூன்று மாவட்டங்களில் இன்று பிற்பகல் வரை பலத்த மழை எச்சரிக்கை
14 ஏப்ரல் 2026, 4:27 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
2028க்குள் 200,000 ருமா சிலாங்கூர் கூ வீடுகள்; இலக்கை எட்ட மாநில அரசு நம்பிக்கை
Sofia Nasir
13 அக்டோபர் 2026

selangor
நகர்ப்புறங்களில் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்க, வண்டல் பொறிகள் பொருத்தும் திட்டம்
Pakiya
30 ஏப்ரல் 2026

selangor
செயல்திறனை அதிகரிக்க, நிர்வாகத்தை வலுப்படுத்த, வள இழப்புகளைச் சமாளிக்கவும் சிலாங்கூர் 'சேவை வழங்கல் தரக் குறியீடு' முறையை அறிமுகப் படுத்தவுள்ளது
Pakiya
14 ஏப்ரல் 2026

selangor
அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் 15 மில்லியன் வெள்ளி உபரி வருமானம் ஈட்டி சாதனை
Pakiya
14 ஏப்ரல் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



